சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவால்ட் பிரிவிஸ் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வெளிப்படையான பதிலை கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணி முதல் போட்டியில் விளையாடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு டிவால்ட் பிரிவிஸ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் முதல் மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் அவரது காயத்தின் தன்மை குறித்து தெளிவான செய்திகள் எதுவும் இல்லை.
சிஎஸ்கே மீளுமா?
நேற்று ஆர்சிபி அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக 250 ரன்கள் முதலில் பேட்டிங் செய்து எடுத்தது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டர் ருதுராஜ், சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஸ் மத்ரே மூவரும் பெரிய ரன் எடுக்காமல் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி பின்னடைவை உருவாக்கினார்கள்.
இருந்த போதும் மீதி இருந்தவர்கள் சிறப்பாக விளையாடி சிஎஸ்கே அணி 207 ரன் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். இந்த சிஎஸ்கே அணியை மோசமான அணி என்று சொல்ல முடியாது. ஆனால் சில முக்கியமான வீரர்கள் திரும்பி வரும் பொழுது பலமாக மாற முடியும்.
பிளமிங் வெளியிட்ட தகவல்
தற்போது முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்து விட்டதால் காயத்தில் இருக்கும் டிவால்ட் பிரிவிஸ் அடுத்த போட்டிக்கு திரும்பி வந்து விடுவாரா? என்கின்ற கேள்வி சிஎஸ்கே ரசிகர்களுக்கு பரவலாக இருந்து வருகிறது.
இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் பேசும்போது "அடுத்த போட்டிக்கு முன்பாக பிரிவிஸ் தயாராகி விடுவார் என்று நம்புகிறோம். அடுத்த ஆட்டத்திற்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. நாங்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம். இந்த ஐந்து நாட்களும் திட்டமிட்டபடியே சென்று அவர் வந்து விடுவார் என்று நினைக்கிறோம். அவர் இல்லாதது ஒரு பெரிய இழப்புதான். அவர் திரும்பி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

