Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இஷான் கிஷன் நடந்து கொண்ட விதம் எனக்கு சுத்தமா பிடிக்கல.. நான் இப்பவும் சிஎஸ்கேவை நேசிக்கிறேன் - ராஜஸ்தான் வீரர் ஜடேஜா

இஷான் கிஷன் நடந்து கொண்ட விதம் எனக்கு சுத்தமா பிடிக்கல.. நான் இப்பவும் சிஎஸ்கேவை நேசிக்கிறேன் - ராஜஸ்தான் வீரர் ஜடேஜா

Swag Sports Tamil 2 weeks ago

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரரும் தற்போதைய ராஜஸ்தான் வீரருமான ரவீந்திர ஜடேஜா இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 243 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சூரியவன்சி 97 ரன்கள் குவித்து அசத்தினார். அதற்குப் பிறகு பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தான் அணியின் சிறந்த பவுலிங் தாக்குப் பிடிக்க முடியாமல் 196 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. என்ற சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியின் தற்போதைய கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே முன்னாள் வீரருமான ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

போட்டிக்குப் பிறகு பேசிய ஜடேஜா, இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார். அதாவது இதற்கு முன்னர் சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சன்ரைசர்ஸ் வீரரான இஷான் கிஷன் சிஎஸ்கே ரசிகர்களை அவமதிக்கும் வகையில் சில சைகைகளில் ஈடுபட்டார். அது தனக்கு முற்றிலும் பிடிக்கவில்லை என்றும் தற்போதும் நான் சிஎஸ்கேவை அதிகமாக நேசிக்கிறேன் என்றும் ஜடேஜா பேசியிருக்கிறார்.

இது குறித்து ஜடேஜா கூறும்போது "இன்றைய போட்டி எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் காவியா மாறனும் இஷான் கிஷனும் சிஎஸ்கே ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு சற்றும் பிடிக்கவில்லை. வேறு எதை விடவும் அதிகம் என்னை அந்த விஷயம் காயப்படுத்தியது. நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எப்போதும் நேசிக்கிறேன். சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்து சிஎஸ்கே ரசிகர்களுக்காக பழி தீர்க்கும் வகையில் நான் கூடுதல் முயற்சி எடுக்க முயன்றேன்.

அது வெற்றியும் பெற்றது நான் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினேன், மேலும் நாங்கள் போட்டியிலும் வெற்றி பெற்றோம். இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்" என்று ரவீந்திர ஜடேஜா பேசியிருக்கிறார். தற்போது வெற்றி பெற்றிருக்கும் ராஜஸ்தான் அணி தனது அடுத்த குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Swag Sports Tamil