நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே என ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணையின் தோல்வி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. பேட்டிங் செய்வதற்கு முழுக்க சாதகமான இந்த ஆடுகளத்தில் 230 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிடில் வரிசை வீரர்களின் சொதப்பலான பேட்டிங் காரணமாக 25 ரன்கள் வரை குறைவாக எடுத்தது. மேலும் அணியின் துவக்க வீரரான கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ஆங்கர் ரோல் விளையாடி வெறுப்பை ஏற்படுத்தினார்.
கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்தில் 6 ரன் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது அதிரடியாக ஆட முயற்சித்து ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அந்த மன நிலையில் இருந்து முழுமையாக வெளி வராத காரணத்தினால் தான் கடந்த போட்டியில் அவர் பொறுமையாக விளையாடியிருக்கிறார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கருதுகிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது "போட்டி முடிந்த பிறகு ருத்ராஜ் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்ததாக கூறினார். ஆனால் அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். வந்து முதலில் சற்று ஸ்விங் ஆகியிருக்கலாம். அதற்காக அவர் ஆடுகளத்தை இப்படி கூறுவது சரியாகாது. கடந்த போட்டியில் ருத்ராஜ் ஆர்ச்சர் பந்து வீச்சுக்கு எதிராக ரிஸ்க் எடுத்து விளையாடினார். ஒருவேளை அந்த நிகழ்வு அவர் மனதில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கலாம் எனவே அவர் அதிலிருந்து வெளிவர வேண்டும்.
இது ஒரு டி20 போட்டி, ரிஸ்க் எடுக்கக்கூடிய ஆட்டம் எனவே நீங்கள் இதிலிருந்து பின் வாங்க முடியாது. குறிப்பாக சிஎஸ்கே பலம் அவர்களின் பந்து வீச்சு அல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பேட்டிங் தான் அவர்களின் பெரிய சக்தி என்றிருக்கும் போது ஆயுஸ் மாத்ரே அவர்களுக்கு அடுத்த பத்து வருடங்களுக்கு சாம்பியன் வீரராக கிடைத்திருக்கிறார். ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூரியவன்சி போல சென்னை அணிக்கு இவர் கிடைத்துள்ளார்" என்று பேசி இருக்கிறார்.

