Dailyhunt
கில்லுக்கும் எனக்கும் தொடர்ந்து சாதனை பார்ட்னர்ஷிப் அமைய இந்த விஷயம்தான் காரணம் - சாய் சுதர்சன் கருத்து

கில்லுக்கும் எனக்கும் தொடர்ந்து சாதனை பார்ட்னர்ஷிப் அமைய இந்த விஷயம்தான் காரணம் - சாய் சுதர்சன் கருத்து

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 39 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் உடனான பார்ட்னர்ஷிப் குறித்து தமிழக வீரர் சாய் சுதர்சன் சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

குஜராத் கொல்கத்தா மோதல்

இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மற்ற ஆடுகளங்களை விட சற்று பெரிது என்பதால் இதனை குஜராத் அணியின் தொடக்க ஜோடி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது.

ஆடுகளத்தின் சூழ்நிலையை உணர்ந்து முதலில் மெதுவாக துவங்கிய சுப்மான் கில், சாய் சுதர்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் 12.2 ஓவர்களில் குவித்தது. இந்த ஜோடி ஆறு முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகமான இதில் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியும் தற்போது இவர் வசம் வந்தடைந்தது. மேலும் தொடக்க வீரர் கேப்டன் கில் 90 ரன்னில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் சுதர்சன் பேட்டி

இந்த சூழ்நிலையில் கில் உடன் பாட்னர்ஷிப் குறித்து சாய் சுதர்சன் பேசும் போது " ஆட்டத்தின் தொடக்கத்தில் நாங்கள் விளையாடிய போது கொல்கத்தா ஆடுகளம் மிகவும் மெதுவாக காணப்பட்டது. பவர் பிளேவில் அதிரடியாக ரன்கள் குவிக்க முடியாமல் ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. எனவே இந்த ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் முதலில் புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்தோம். நான் மற்றும் கில் எங்கள் இருவருக்கும் இடையே சிறந்த தொடர்பு இருந்தது. இருப்பினும் அவ்வப்போது அவர்கள் கொடுத்த மோசமான பந்துகளை நாங்கள் தண்டிக்க தவறவில்லை.

நான் இல்லாம ஐபிஎல் சாதனையா.? 90+ ரன்ஸ்.. கில் 7 முறை, கேஎல் ராகுல் 10.. கிங் கோலி இத்தனை முறையா.? வியப்பில் ரசிகர்கள்

எனவே நாங்கள் போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். நான் கில்லுடன் இணைந்து விளையாடுவதை அனுபவித்து வருகிறேன். அவரது அனுபவம் எனக்கு நன்றாக இருக்கிறது. சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்போது விக்கெட்டுகளுக்கு இடையில் நாங்கள் ஓடுவதை பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆடுகளம் கடினமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நாங்கள் கையில் இருக்கும் விக்கட்டுகள் முக்கியமானது என்பதையும் புரிந்து கொண்டோம். எனவே எங்களது பந்துவீச்சாளர்களுக்கு சிறந்த ஸ்கோரை வழங்கினோம்" என்று பேசி இருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Swag Sports Tamil