Dailyhunt
ருதுராஜ் ஆர்சிபி கிட்ட வச்சிருந்த பிளான் மோசமானது.. தோனி கைவிட்ட திட்டம் அது - அம்பதி ராயுடு விமர்சனம்

ருதுராஜ் ஆர்சிபி கிட்ட வச்சிருந்த பிளான் மோசமானது.. தோனி கைவிட்ட திட்டம் அது - அம்பதி ராயுடு விமர்சனம்

டப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே மோசமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தியதாக அம்பதி ராயுடு விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் குவிக்க மொத்தம் 250 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

சிஎஸ்கே மோசமான திட்டம்

இந்த போட்டியில் சிஎஸ்கே இறுதிக்கட்ட ஓவர்களில் வலதுகை பேட்ஸ்மேனுக்கு கிரீசில் வலது பக்கமாக இருந்து வந்து பந்து வீசியது. இதை பயன்படுத்திக் கொண்ட டிம் டேவிட் ஜேமி ஓவர்டன் வீசிய ஓவரில் 30 ரன்கள் குவித்தார். இது போட்டியை மாற்றியது.

இது குறித்து அம்பதி ராயுடு பேசும் போது "அவர்களின் பந்துவீச்சு திட்டம் மோசமானது என்பதை விட அந்த மோசமான திட்டத்தையே தொடர்ந்து பின்பற்றினார்கள். அந்த நேரத்தில் குறுக்கிட்டு வந்து வீச்சாளருடன் பேசி 20 30 நொடிகள் செலவு செய்து, ஆர்சிபி வேகத்தை நிறுத்த யாருமே இல்லை. அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொண்டிருக்க வேண்டும்"

தோனி செய்ய மாட்டார்

"இந்த பந்து வீச்சு திட்டத்தை பலரும் பல ஆண்டுகளாக முயன்று பார்த்து பலன் அளிக்கவில்லை. மேலும் கடைசி கட்ட ஓவர்களுக்கு இப்படியான திட்டத்தை தோனி விரும்பியதில்லை. பேட்டர்களாகிய நாங்களே அந்த கோணத்தில் வரக்கூடிய பந்து எளிதானது என்று உணர்ந்தோம். கிரீசுக்கு வெளியே ஒரு அரை அடி காலை எடுத்து முன்னால் வைத்தால் அந்த பந்தின் கோணம் செயலிழந்து விடும்"

சிஎஸ்கே தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சரியில்லை.. மெகா ஆக்ஷனில் அவரை வாங்கிருந்தா ஜடேஜாவை இழந்திருக்க மாட்டோம் - முன்னாள் சிஎஸ்கே வீரர்

"இது அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டிய ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். சில சமயங்களில் நீங்கள் வழக்கமான திட்டங்களை கொண்டு வருவது நல்லது. சில ஏக்கர் மற்றும் மெதுவான பந்துகள் போதுமானது. இப்படி எளிமையாக வைத்திருந்தாலே போதும்" என்று கூறியிருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Swag Sports Tamil