சிஎஸ்கே பிளேயிங் லெவனில் ஒரு குறிப்பிட்ட வீரர் இருந்தால் வெல்லவே முடியாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர்கள் ரன் இல்லாமல் வெளியேறினார்கள். ஆனாலும் சிஎஸ்கே அணி தாக்குப்பிடித்து 207 ரன்கள் எடுத்தது.
இவரை ஆடக்கூடாது
இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆரம்பத்திலேயே அணி தேர்வில் தவறு செய்வதாகவும், ஒரு குறிப்பிட்ட வீரரை விளையாட வைத்ததின் மூலமாக அவர்கள் பெரிய தவறு செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது " சிஎஸ்கே அணி தேர்வு தொடக்கத்திலேயே தவறானது. அவர்கள் முதலில் அகில் ஹுசைனை விளையாடி இருக்க வேண்டும். அது மிகவும் வெளிப்படையான ஒரு செலக்சன். அப்படி இருக்கும் பொழுது மேட் ஹென்றியை ஏன் விளையாடினார்கள் என்று தெரியவில்லை. அவரை ஆர்சிபி துவம்சம் செய்தது. அவர் மீண்டும் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் விளையாட கூடாது"
இன்னும் எவ்வளவு ஆதாரம் வேண்டும்
"மேட் ஹென்றி அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இன்னும் எவ்வளவு ஆதாரம் வேண்டும். எதைப் பார்த்து இவர்கள் அதை நம்புவார்கள். உங்களுடைய பந்துவீச்சை இவ்வளவு பலவீனமாக இருந்தும் நீங்கள் ஏன் அகல் ஹூசைனை தேர்வு செய்யவில்லை"
"நாம் அனைவரும் பந்துவீச்சாளர்களை குறை சொன்னாலும் கூட சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க வேண்டும். சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஏமாற்றம் தந்து கொண்டிருக்கிறார். அவர் சீக்கிரத்தில் திரும்பி வந்து ரன்கள் எடுக்க ஆரம்பிக்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.

