நேற்று சிஎஸ்கே அனுப்பி எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றிக்கான காரணம் குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற்று இருந்தது. நேற்று பெற்ற வெற்றி இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதுதான் எங்கள் கொள்கை
இந்த வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது "இன்று நாங்கள் பேட்டிங் ஆரம்பித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. அது எங்களுக்கு சிறப்பான ஒரு தொடக்கம். எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடிய விதம் ரிதமை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் எல்லோரும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இது நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. அழுத்தமான நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என எல்லோருக்கும் தெரியும்"
"எங்கள் அணியில் நாங்கள் எடுத்த முடிவு என்னவென்றால் ஒருவரை கவரும் வகையில் இன்னொருவர் விளையாட வேண்டும் என்பதுதான். இது எங்களுக்கு தெளிவை வழங்குகிறது. மேலும் ஒருவரை ஒருவர் சவாலாக எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது. ப்ரியன்ஸ் ஆர்யா 11 பந்தில் 39 ரன்கள் எடுத்த தொடக்கம்தான் எங்களுக்கு எப்போதும் தேவை"
நான் சொன்ன செய்தி
"எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு நான் சொன்ன செய்தி என்னவென்றால் 'இது பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம் போல் உள்ளது, ஆனால் நாம் பந்துவீச்சை தொடங்கிய விதத்தில் மூன்று ஓவர்களுக்கு 25 ரன்கள் மட்டுமே கொடுத்தோம், அதனால் அமைதியாக இருக்க வேண்டும்' என்று சொன்னேன்"
"எதிரணியில் உள்ள பேட்ஸ்மேன்களை வைத்து நாங்கள் சாகலை பந்துவீச்சில் பயன்படுத்தாமல் விட்டோம். அவர் எவ்வளவு சிறந்தவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் நான் நிச்சயம் அவரை நம்புவேன்" என்று கூறியிருக்கிறார்.

