Dailyhunt
சிஎஸ்கேவை ஏமாற்றிய டெல்லி.. மில்லர் செய்த மெகா தப்பு.. 1 ரன்னில் பறிபோன வெற்றி.. குஜராத் நிம்மதி

சிஎஸ்கேவை ஏமாற்றிய டெல்லி.. மில்லர் செய்த மெகா தப்பு.. 1 ரன்னில் பறிபோன வெற்றி.. குஜராத் நிம்மதி

ன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டேவிட் மில்லர் ஆட்ட விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டது ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த குஜராத் அணிக்கு கேப்டன் கில் 45 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள், ஜோஸ் பட்லர் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.

டெல்லி கேப்பிடல்ஸ் சொதப்பல்

இதை தொடர்ந்து விளையாடிய டெல்லி அணிக்கு பதும் நிசாங்கா 24 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 41 ரன்கள், கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களுக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் டேவிட் மில்லர் உள்ளே வந்து அதிரடியாக விளையாடி கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்கின்ற நிலைக்கு போட்டியை மாற்றினார்.

மில்லர் செய்த மெகா தப்பு

இந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் விப்ராஜ் நிகம் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து உள்ளே வந்த குல்தீப் யாதவ் உடனடியாக சிங்கள் எடுத்தார். நான்காவது பந்தில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் குல்தீப் யாதவை நம்பி ஐந்தாவது பந்தில் டேவிட் மில்லர் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து ஆறாவது பந்தை தவற விட்டு ஓட குல்தீப் ரன் அவுட் ஆனார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி பரிதாப தோல்வி அடைந்தது. டேவிட் மில்லர் ஐந்தாவது பந்தில் சிங்கிள் வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் போட்டி டிரா ஆகி இருக்கும். குல்தீப் தொடர்ந்து சிங்கள் எடுத்திருந்தால் போட்டியை வென்று இருக்கலாம். ஆனால் டேவிட் மில்லர் செய்த தவறு போட்டியை தோற்றார்கள்.

நேத்து நடந்ததிலிருந்து பும்ரா மீண்டு வந்துடுவார்.. ஆனால் ஆளப்போறது 15 வயசு சூரியவன்சிதான் - ஹர்பஜன் சிங் கருத்து

மேலும் சிஎஸ்கே போல குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து இருந்தது. இன்று மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் புள்ளி பட்டியலில் மேலே சென்று விட்டது. ஒருவேளை இந்த போட்டியில் தோற்று இருந்தால் சிஎஸ்கே போல மூன்று போட்டிகளையும் குஜராத் தோற்று இருக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Swag Sports Tamil