நடப்பு ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் பேட்டிங் மிகவும் சிறப்பான முறையில் இருப்பதாக முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் பாராட்டி இருக்கிறார்.
இந்த தொடரில் இஷான் கிஷான் 14 போட்டிகளில் 178 ஸ்ட்ரைக் ரைட்டில் 569 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் மூன்று முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
ஹைதராபாத் அசத்தியது
இது குறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது "இன்று ஹைதராபாத் அணி ஹைதராபாத் அணி போலவே விளையாடியது. அவர்களிடம் இருக்கும் முழு பவரையும் இன்று வெளிப்படுத்தியது. அந்த அணிக்கு முதல் நான்கு இடங்களில் மிகவும் தாக்கத்தை செலுத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சிறப்பாக வந்தார்கள்"
"இந்த நால்வரில் ஹெட் தவிர மற்ற மூவரும் இந்த தொடரில் நிலையான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் மூவருடைய பேட்டிங்கும் மிகவும் அருமையான முறையில் இருக்கிறது. குறிப்பாக இஷான் கிஷான் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது"
இது வேற மாதிரி ஆட்டம்
"இந்த போட்டிக்கு முன்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மெதுவான ஆடுகளத்தில் இஷான் கிஷான் சிஎஸ்கே அணிக்கு எதிராக மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால் இன்று அதற்கு நேர் எதிராக விளையாடி அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்"
"இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுப்பது எல்லா அணிகளுக்கும் சாத்தியமான விஷயம் கிடையாது. இந்த ஐபிஎல் தொடரில் பலமான பவுலிங் யூனிட் ஆக பார்க்கப்படும் ஆர்சிபிக்கு எதிராக இவ்வளவு ரன்கள் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. ஒட்டு மொத்தத்தில் இது மிக அருமையான செயல்பாடு" என்று கூறியிருக்கிறார்.

