Dailyhunt
தோனி இல்லாமல் பிளமிங் ஒண்ணுமே கிடையாது.. ருதுராஜ் சுதாரித்து இதை செய்யணும் - சடகோபன் ரமேஷ் பேச்சு

தோனி இல்லாமல் பிளமிங் ஒண்ணுமே கிடையாது.. ருதுராஜ் சுதாரித்து இதை செய்யணும் - சடகோபன் ரமேஷ் பேச்சு

சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் தோனி இல்லாமல் பிளமிங் எதுவும் செய்திருக்கவில்லை என இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறியிருக்கிறார்.

ஸ்டீபன் பிளமிங் வெளிநாட்டு டி20 தொடர்களில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஆனால் அவர் ஐபிஎல் தவிர வேறு எங்கும் கோப்பைகளை பயிற்சியாளராக வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின்- அம்பதி ராயுடு விமர்சனம்

கடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது வலதுகை பேட்ஸ்மேன் டிம் டேவிட்டுக்கு கிரீசில் வலதுபுறம் இருந்து சிஎஸ்கே பவுலர்கள் பந்து வீசினார்கள். இந்தத் திட்டத்தை ஸ்டீபன் பிளமிங் எல்லா வெளிநாட்டு தொடர்களிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் எனவும், இது தோல்வி அடைந்த திட்டம் எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த பந்து வீச்சு திட்டத்தை டி20 கிரிக்கெட்டில் எப்போது ஒதுக்கி வைத்து விட்டதாகவும், கடைசி கட்டத்தில் கிரீசில் இடதுபுறமாக இருந்து யார்க்கர் மற்றும் மெதுவான பந்துகளை வீசுவதே அவருடைய திட்டமாக இருந்தது என்றும் அம்பதி ராயுடு கூறியிருந்தார்.

தோனிதான் காரணம்

இது குறித்து சடகோபன் ரமேஷ் கூறும்போது " ஸ்டீபன் பிளம்மிங் பயிற்சியாளராக தோனி இல்லாமல் வேறு எந்த தொடர்களிலும் கோப்பையை வென்றது கிடையாது. இதன் மூலம் அவருடைய வெற்றிகளுக்கு காரணமாக தோனியே இருந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்"

பும்ராவுக்கே சூரியவன்சிய பார்த்து பயமா தான் இருக்கு.. அதனாலதான் கடைசியா சிரிச்சிட்டாரு - ஸ்டெய்ன் கருத்து

"இப்பொழுது விளையாட்டு மாறி இருக்கிறது. எனவே வீரர்களைப் போல பயிற்சியாளர்களும் அதற்கு தகுதியாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பிளம்மிங் தற்போது ஐந்து படிகள் பின்தங்கி இருக்கிறார். எனவே அவர் மாற்றப்பட வேண்டும். அதே சமயத்தில் கேப்டனாக ருதுராஜ் தனக்கு நன்மை செய்து கொள்ளும் வகையில் ரன்கள் எடுக்க வேண்டும். அதன் மூலம் தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Swag Sports Tamil