நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக பவர் பிளேவில் கில் புத்திசாலித்தனமான அதிரடி உடன் விளையாடியது குறித்து வீரேந்தர் சேவாக் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய குஜராத் அணிக்கு ஹேசில்வுட் வீசிய இரண்டாவது ஓவரில் கில் அதிரடியாக 24 ரன்கள் எடுத்தார். மேலும் பவர் பிளேவில் 18 பந்தில் 43 ரன்கள் குவித்து விராட் கோலி இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
விராட் உற்சாகம் ஆச்சரியம்
இதுகுறித்து பேசி உள்ள வீரேந்தர் சேவாக் கூறும்போது "நேற்று கில் பவர் பிளேவில் எவ்வளவு பவுண்டரிகள் அடித்தாரோ அந்த அளவிற்கு விராட் கோலி உற்சாகமடைந்து கொண்டிருந்தார். இந்த வயதிலும் விராட் கோலி எவ்வளவு ஆற்றலை காட்டுவதை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது"
"நேற்று கில் 18 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். அவர் ஆடியதை பார்த்தால் பவர் பிளேவில் ஆட்டத்தையும் முடித்து விடுவார் என்பது போல இருந்தது. ஆனால் சிறப்பாக விளையாடிய அவர் இறுதியில் விராட் கோலி கைகளில் சிக்கினார். ஒருவேளை பந்து அவரிடம் போகாமல் இருந்திருந்தால் அவர் தொடர்ந்து விளையாடி வெற்றி பெற்று கொடுத்திருப்பார்"
விராட்டின் வித்தை
"இந்த போட்டியில் ஹேசில்வுட் ஓவரில் 24 ரன்கள் கில் எடுத்தார். அவர் பந்தை நல்ல லென்த்தில் வைப்பார் என்று அவருக்குத் தெரியும். எனவே கொஞ்சம் இடம் விட்டு முன்னே வந்து விளையாடினார். இதற்குப் பிறகு அவர் பின் காலில் போய் விளையாடுவதும் அருமையாக இருந்தது. இதையெல்லாம் விராட் கோலி செய்வார்தானே? கில் அவரிடமிருந்து இதையெல்லாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்"
"மேலும் நீங்கள் ஒரு பேட்டராக எதிர் அணியின் சிறந்த பவுலரை அட்டாக் செய்ய வேண்டும். அதை நீங்கள் வெற்றிகரமாக செய்து விட்டால் அவர்களுடைய பௌலிங் யூனிட் நம்பிக்கை இழந்து விடும். நேற்று கில் அதைத்தான் மிகவும் சரியாக செய்திருந்தார்" என்று கூறியிருக்கிறார்.

