Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விராட் கோலிக்காக அதை செய்வேன்னு சொன்ன அவரை டீமை விட்டு தூக்குங்க.. ஆர்சிபி வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா பேட்டி

விராட் கோலிக்காக அதை செய்வேன்னு சொன்ன அவரை டீமை விட்டு தூக்குங்க.. ஆர்சிபி வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா பேட்டி

Swag Sports Tamil 2 weeks ago

ன்று நடைபெற உள்ள முதலாவது குவாலிபயர் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியில் நீக்கப்படும் வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்கள் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடர் ஆனது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இதன் முதலாவது குவாலிஃபைர் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி வெளியேறாமல் காத்திருந்து இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறும் அணியோடு மோதும்.

இந்த சீசனில் முதல் இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வரிசைகள் நன்றாக இருக்கும் நிலையில் மிடில் வரிசை சற்று கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அந்த அணியின் ஜித்தேஷ் சர்மா பெரிய அளவில் சோபிக்காத சூழ்நிலையில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரை நீக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா சில விஷயங்களை பரிந்துரைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது "நான் இப்போது ஒரு புரட்சிகரமான யோசனை ஒன்றை சொல்லப் போகிறேன். இந்தப் போட்டியில் பில் சால்ட் விளையாட கிடைப்பார் என்று தெரிகிறது. அப்படி என்றால் அவரை தொடக்க வீரராக களம் இறக்குங்கள். அப்படி என்றால் கடந்த போட்டியில் தொடக்க இடத்தில் விளையாடிய வெங்கடேஷ் ஐயரின் நிலை என்ன? என்று கேட்டால் அவரை மிடில் வரிசைக்கு மாற்றுங்கள்.

அந்த வரிசையில் ஏற்கனவே விளையாடிக் கொண்டிருக்கும் ஜித்தேஷ் ஐயரை அணியிலிருந்து நீக்கி விடுங்கள். இது சற்று கடினமான முடிவு தான். ஆனால் அவர் பார்மில் இல்லாத போது இதைத்தான் செய்ய வேண்டும். மேலும் வெங்கடேஷ் ஐயர் மிடில் வரிசையில் நன்றாக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். எனவே அவரது இந்த பாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை சிறந்த அறிவாளித்தனமாக இருக்கும்" என்று பேசி இருக்கிறார்.ஜித்தேஷ் ஷர்மா கடந்த சீசனின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பேன் என்று கூறி அதையும் செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Swag Sports Tamil