Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
WC 2027..உலகக் கோப்பைக்கு ரோஹித் வேண்டாமா?. ஜான்டி ரோட்ஸ் சொன்ன அந்த ஒரு விஷயம்

WC 2027..உலகக் கோப்பைக்கு ரோஹித் வேண்டாமா?. ஜான்டி ரோட்ஸ் சொன்ன அந்த ஒரு விஷயம்

2027 ஒருநாள் உலகக் கோப்பையை நோக்கி இந்திய அணி திட்டமிட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் ரோஹித்தின் அனுபவம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு வீரரின் திறமை மற்றும் சமீபத்திய செயல்பாடுகளை மட்டுமே தேர்வின்போது பார்க்கக் கூடாது என்றும் ரோட்ஸ் கூறியுள்ளார். உலகக் கோப்பை என்பது மிகுந்த அழுத்தம் நிறைந்த தொடர் என்பதால், அந்த சூழ்நிலையை ஏற்கனவே அனுபவித்த வீரர்களின் மன உறுதியும் அனுபவமும் அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்பது அவரது கருத்தாகும்.

இதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் கூறும்போது "உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவமும் நாம் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஒரு காரணியாகும். ரோஹித் சர்மா போன்ற ஒருவரை உங்கள் அணியில் வைத்திருப்பது உலகக் கோப்பையில் மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Swag Sports Tamil