Tuesday, 10 Dec, 4.52 pm Swasthik TV

ஸ்வஸ்திக் டிவி
விபூதி பிறந்த கதை

பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விளக்குகின்றன.. அதனை சிறிது கண்ணுறுவோம்
ஒருசமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விளக்கியதுடன் அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்தும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றில் மறைந்து நின்று செயல்படுவதையும் விளக்கி கூறினார்.

மகா அக்னியாக விளங்கும் தாமே வானத்தில் இடி மின்னலாகவும் பூமிக்குள் எரிமலை குழம்பாகவும், கடலுக்குள் வடவாமுகாக்னியாகவும் இருப்பதை விளக்கினார், பின் அந்த அக்னிவடிவமாக இரண்டு முகங்களுடன் ஏழு கைகளும் ஏழு நாக்குகளும், மூன்று கால்களும், தலையில் நான்கு கொம்புகளுடன் காட்சியளித்தார். அந்த பேருருவை கண்டு பயந்த உமாதேவி அவரை வணங்கி தமக்கு காப்பாக இருக்கும் ஒரு பொருளை அருளுக என்றாள்.

செம்பொன் மேனியில் வெண்ணிறமாய் பூத்திருந்த வெண்பொடியை வழித்து ,இதனை காப்பாக கொண்டு இவ்வுலகினை வழி நடத்துவாய் என்றார். அதனால் அதற்க்கு சிவவீர்யம் எனப்பட்டது, தேவி அதனை நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது.உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது.

எஞ்சிய விபூதியை அவர் ரிஷப தேவரிடம் தர அவர் அதனை உட்கொண்டார், அதனால் அவர்க்கு அளப்பரிய சக்தியை கொடுத்தது, இதனை அவர் மூலம் கோ உலகத்தில் உள்ள ஐந்து பசுக்களான சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை,நந்தை ஆகிய பசுக்களிடம் சேர்த்து பின்னர் பூலோக பசுக்களிடம் வந்து சேர்ந்தது. அதனாலேயே நாம் கோ ஜலம், கோ சாணம் ஆகியவற்றினை கலந்து உருண்டைகளாக பிடித்து நெருப்பிலிட்டு தயாரிக்கிறோம்.
திருநீற்றினை வாங்கி இட்டுக்கொள்வதுடன் சிறிது வாயிலும் போட்டுக்கொண்டால் அநேக வியாதிகளை தீர்க்கும்.

முறையாக மந்திரிக்கப்பட்ட விபூதி வாதத்தினால் உண்டாகும் எண்பத்தொரு வியாதிகளையும் பித்தத்தால் உண்டாகும் அறுபத்து நான்கு வியாதிகளையும், கபத்தினால் உண்டாகும் இருநூற்று பதினைந்து வியாதிகளையும் தீர்க்கும்.

பின் குறிப்பு - இவையெல்லாம் கடையில் விற்கும் காகிதசாம்பல் விபூதியில் கிடைக்காது, பசுஞ்சாண விபூதி வாங்கி அதனை இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து எடுத்து பத்திரப்படுத்தி பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம ,நமசிவாய என சொல்லி உபயோகிப்பீர் நலம் பெறுவீர்.

ஜீவ பஸ்ப விபூதி
தயாரிக்கும் முறை ..!

அருளிச் செய்த ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை.

1. சுத்தமான பசுஞ் சாண விபூதி - 1.1/2 கிலோ

2. படிகார பஸ்பம் - 10 கிராம்

3. கல் நார் பஸ்பம் - 10 கிராம்

4. குங்கிலிய பஸ்பம் - 10 கிராம்

5. நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம்

6. ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம்

7. பவள பஸ்பம் - 10 கிராம்

8. சங்கு பஸ்பம் - 10 கிராம்

9. சிலா சத்து பஸ்பம் - 10 கிராம்

10. சிருங்கி பஸ்பம் - 10 கிராம்

11. முத்துச் சிப்பி பஸ்பம்

12. நத்தை ஓடு பஸ்பம்

இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.
இது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர்.

இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தியாகும்.

இதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும்.

மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுதத
வேண்டும்.

எல்லாம் சரி . கோ சாலைகளில் பசுஞ்சாண விபூதி வாங்கி விடலாம் . அனால் இந்த பஸ்பம் எல்லாம் எங்கே தேடுவது என்ன விலை இருக்குமோ என நினைக்கலாம் !

அனால் இந்த பஸ்பம் எல்லாம் ஒரே இடத்தில மிக சுலபமாக கிடைக்கிறது . விலையும் குறைவு தான். எல்லா பஸ்பங்களும் சேர்த்து 400 ரூபாய் தான் வருகிறது.

அருகில் உள்ள சித்த மருந்து கடையில் கிடைக்கிறது.
சித்த பார்முலா படி இந்த பஸ்பங்களை தயாரிப்பவர்கள்:

உங்கள் ஊரில் உள்ள சித்த மருந்து விற்பனையாளர்களிடம் கேளுங்கள்

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Swasthiktv
Top