Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதல் இரண்டு இடங்களில் அதிமுக, திமுக.. 3வது இடத்தில் தவெக.. இதுதான் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள்.. ஆனால் சீமானை கணக்கிலேயே சேர்க்கலையே.. மற்றவைன்னு போட்டு அவமதிக்கிறாங்களே.. மற்றவைன்னா சசிகலா, வேல்முருகன் பட்டியல்ல தான சீமானும் வர்றாரு.. இந்த முறையாவது 234 தொகுதியிலும் டெபாசிட் வாங்கி மானத்தை காப்பாத்துவாரா?

முதல் இரண்டு இடங்களில் அதிமுக, திமுக.. 3வது இடத்தில் தவெக.. இதுதான் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள்.. ஆனால் சீமானை கணக்கிலேயே சேர்க்கலையே.. மற்றவைன்னு போட்டு அவமதிக்கிறாங்களே.. மற்றவைன்னா சசிகலா, வேல்முருகன் பட்டியல்ல தான சீமானும் வர்றாரு.. இந்த முறையாவது 234 தொகுதியிலும் டெபாசிட் வாங்கி மானத்தை காப்பாத்துவாரா?

Tamil Minutes 2 weeks ago

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன.

பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் கணிப்பு நிறுவனங்கள் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தை முதல் மூன்று இடங்களில் வரிசைப்படுத்தியுள்ளன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்ற சீமானின் கட்சி பல இடங்களில் ‘மற்றவை’ என்ற பட்டியலிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.

சசிகலா, வேல்முருகன் போன்ற தலைவர்களுடன் ஒரே பட்டியலில் சீமான் நிறுத்தப்படுவது அவரது தம்பிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தார்மீகத்தை கொண்ட ஒரு கட்சியை, வெறும் ‘மற்றவை’ என வகைப்படுத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது அவர்களின் வாதம்.

கடந்த 2021 தேர்தலில் சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்ற சீமான், இந்த முறை தவெக-வின் வருகையால் தனது வாக்கு வங்கியை தக்கவைப்பாரா அல்லது இழப்பாரா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.

குறிப்பாக, இந்த தேர்தலிலாவது அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை திரும்ப பெற்று தனது அரசியல் கௌரவத்தை காப்பாற்றி கொள்வாரா என்பதை மே 4-ஆம் தேதி முடிவுகள் உறுதிப்படுத்தும். கணிப்புகள் ஒருபுறம் அவரை புறக்கணித்தாலும், களத்தில் நிலவும் மௌனமான வாக்குகள் சீமானுக்கு கைகொடுக்குமா என்பது தற்போதைய மர்மமாக உள்ளது.

Author: Bala Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Minutes