Monday, 01 Jan, 2.34 am தமிழகம்

சேலம்
புத்தாண்டு கொண்டாட்டம்

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு சேலம் சரகம் முழுவதும் சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆங்கில புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது.
குறிப்பாக சேலம் நான்கு சாலை குழந்தை இயேசு பேராலயம், சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலயம், அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட முக்கிய தேவாலயங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சேலத்தில் உள்ள முக்கிய கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் சேலம் மாநகரம், மாவட்டம் உள்ளிட்ட சேலம் சரகம் முழுவதும் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Tamil Nadu
Top