Monday, 18 Mar, 9.34 am தமிழகம்

சிவகங்கை
மக்களவைத் தேர்தல் - வேட்பாளர்கள் சுய விவர குறிப்பு

அதிமுக
பெரம்பலூர்
பெயர் : என்.ஆர். சிவபதி.
பிறந்த தேதி, வயது : 10. 08. 1963, (56).
பெற்றோர் : ரெங்கராஜன் - சரோஜா,
கல்வித்தகுதி : எம்.ஏ, பி.எல்
மனைவி : சாந்தி, மகள்கள் - சிவசங்கரி, லட்சுமிபிரியா
இனம் : இந்து முத்தரையர்.
தொழில் : விவசாயம்.
அரசியல் பதவி : மாநில இளைஞர் அணிச் செயலர்
எம்எல்ஏ பதவி : 1991-இல் எம்.எல்.ஏ (தொட்டியம்),
2011-இல் எம்எல்ஏ (முசிறி).


கரூர்
பெயர்: டாக்டர் எம். தம்பிதுரை.
பிறந்த தேதி, வயது: 15 -03 -1947. வயது 72.
பிறந்த இடம், முகவரி: சிந்தகம்பள்ளி கிராமம், பர்கூர் பஞ்சாயத்து யூனியன், கிருஷ்ணகிரி வட்டம், தருமபுரி மாவட்டம்.
தந்தை: (லேட்) எம். முனிசாமி கவுண்டர்.
தாய்:(லேட்) கமலாம்மாள்.
மனைவி: டாக்டர் பானுமதி தம்பிதுரை, எம்பிபிஎஸ், டிஜிஓ.,
2 மகள்கள்: லசியா, நம்ரதா.
கல்வித்தகுதி: சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் 1970-ம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார். 1976 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் எம்.பில்., பட்டம் பெற்றார். 1977-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் எம்.லிட் படிப்பை முடித்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் 1986 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
கல்விப் பணி: 1971-72 ஆம் ஆண்டு பச்சையப்பா கல்லூரியில் அக்ரோ-பொருளாதார ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்துள்ளார். 1980 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பா கல்லூரியில் பொருளாதார துறை விரிவுரையாளராகவும், சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் 3 ஆண்டுகள் (1982-84) எம்பிஏ துறையில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
தொழில்: விவசாயம்.
அரசியல்: அதிமுகவில் 1972 முதல் உறுப்பினராக இருந்து வருகிறார். 1998 முதல் அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார்.தற்போது கரூர் எம்.பி மற்றும் மக்களவை துணைத் தலைவராக உள்ளார்.


திமுக
தஞ்சாவூர்
பெயர்: எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.
பிறந்த ஆண்டு: 1950, தந்தை: சுப்பையா
தாய்: மரகதம் அம்மாள், மனைவி: மகேஸ்வரி
மகள்: பிரீத்தி, சொந்த ஊர்: தஞ்சை அருகே உள்ள நாட்டாணி (தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது). வசிப்பிடம்: சீனிவாசபுரம், தஞ்சாவூர்.
சாதி: இந்து- கள்ளர், படிப்பு: எம்.ஏ., பி.எல்.
தேர்தல் அனுபவம்: 1984, 89, 91 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி;
1996, 98, 99, 2004, 2009 ஆகிய ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் தஞ்சை தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி. 2004-2014ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சர். தற்போது தஞ்சை தொகுதியில் 9ஆது முறையாக போட்டியிடுகிறார்.
கட்சிப் பதவி: மாநில மாணவரணி, விவசாய அணி இணை செயலராகவும், மத்திய வேளாண்மை நிலைக்குழு தலைவராகவும், தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலராகவும் பணியாற்றியவர். தற்போது திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக
உள்ளார்.

பெரம்பலூர்
பெயர் : பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து
பிறந்த தேதி : 24. 08. 1941
பெற்றோர்கள் : ராமசாமி உடையார் - வள்ளியம்மை
கல்வித் தகுதி : பி.எஸ்.சி., பி.இ.,
பிறந்த ஊர் : தாண்டவராயபுரம், சேலம் மாவட்டம்,
தற்போதை முகவரி : வலசரவாக்கம், சென்னை, மனைவி : ஈஸ்வரி.
மகன்கள் : ரவி பச்சமுத்து, சத்யநாராயணன், மகள் கீதா.
தொழில் : எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். போக்குவரத்து, டி.வி நிறுவனம்,
அரசியல் : இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் .
தேர்தல் அனுபவம் : 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில்
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


சிதம்பரம் (தனி)
பெயர்: தொல்.திருமாவளவன், பிறந்த தேதி: 17-8-1962
பெற்றோர் பெயர்: ராமசாமி என்ற தொல்காப்பியன்- பெரியம்மா.
சொந்த ஊர்: அங்கனூர், செந்துறை வட்டம், அரியலூர் மாவட்டம்.
கல்வி: எம்.ஏ., பி.எல்., பி.எச்டி. குடும்பம்: திருமணமாகவில்லை.
சகோதரர்: தொல்.செங்குட்டுவன், தொல்.பாரி, ஒரு சகோதரி.
கட்சிப் பதவி: விசிக தலைவர் (தடய அறிவியல் துறையில் பணியாற்றிய இவர், 1990-ஆம் ஆண்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நிறுவினார்).
தொழில்: முழு நேர அரசியல் பணி.
தேர்தல் களம்: 1999 - சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் தோல்வி.
2001 - மங்களூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி. (2004-ஆம் ஆண்டு ராஜிநாமா). 2004 - சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தோல்வி.
2009-2014 சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.
2014 - சிதம்பரம் மக்களவை தேர்தலில் தோல்வி.
2016 - காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வி.


மயிலாடுதுறை
பெயர்: எஸ்.ராமலிங்கம், தந்தை: செல்லப்பெருமாள்
தாய்: அங்கயற்கண்ணி, பிறந்த தேதி: 24.4.1945
சொந்த ஊர்: சீனிவாசநல்லூர் கிராமம், திருவிடைமருதூர்.
படிப்பு: பி.ஏ., மனைவி: யசோதா
மகள்: குறள்மொழி, மகன்: அறிவுமணி
கட்சிப் பணி: 1969ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினர். 1970ஆம் ஆண்டு முதல் திமுக மாணவர் முன்னேற்ற கழக செயலராக பணியை தொடங்கிய ராமலிங்கம், பின்னர் ஊராட்சி மன்ற தலைவராகவும், 1977 முதல் 4 முறை திருவிடைமருதூர் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் கிராமிய மின்சார கூட்டுறவு சங்கத் தலைவராகவும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவராகவும், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி துணைத் தலைவராகவும், 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும், மாநில 4-ஆவது நிதி ஆணைய
உறுப்பினராகவும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
திருவிடைமருதூர் திமுக ஒன்றியச் செயலாளராக 8 முறை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது வரை பணியாற்றி வருகிறார். தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

அமமுக
தஞ்சாவூர்
பெயர்: பொ.முருகேசன்
பிறந்த தேதி: 11.08.1957
ஊர்: தட்டான்கோவில், திருவாரூர் மாவட்டம்.
படிப்பு: எம்.எஸ்.சி.,இயற்பியல், ஜாதி: கள்ளர்
தொழில்: தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக குழும நிறுவனர், 1986ஆம் ஆண்டு சிறிய அளவில் கணினி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் 1994ஆம் ஆண்டு கலை கல்லூரியும், 2000ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியும், 2004ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கினார். 2008ஆம் ஆண்டு பொன்னையா ராமஜெயம் பல்கலைக்கழகத்தை தொடங்கினார். 2014ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரியும், 2016ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் மருத்துவக் கல்லூரியும் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 31 ஆண்டுகளாக பொன்னையா ராமஜெயம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை தஞ்சாவூரில் நடத்தி வருகிறார்.
கட்சி அனுபவம்: 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்.
தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினர்.


பெரம்பலூர்
பெயர்: மா. ராஜசேகரன் (57)
பிறந்த தேதி: 02. 03. 1962
பெற்றோர் : மாணிக்கம் - லெஷ்மியம்மாள்
கல்வித் தகுதி : எம்.காம்
மனைவி : சித்ரா, மகன் - ராஜீவ், மகள் - கவுதமி.
இனம் : இந்து முத்தரையர். தொழில் : விவசாயம்.
முகவரி : மீனாட்சி புரம் தெரு, திருப்பராய்த் துறை, திருச்சி மாவட்டம்,
அரசியல், பதவி : திருச்சி மாவட்ட செயலர் (தெற்கு)
தேர்தல் அனுபவம் : 1989, 2006, 2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்
மற்றும் 1999, 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர் பதவி : 2006 - 2011 காங்கிரஸ் எம்.எல்.ஏ (தொட்டியம்)
2014 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

திருச்சி
பெயர்: சாருபாலா ஆர்.தொண்டைமான்.
வயது : 60.
கணவர்: ராஜா ராஜகோபால தொண்டைமான்.
குழந்தைகள்: ஒரு மகன், ஒரு மகள்.
படிப்பு : எம்.ஏ., பொருளாதாரம்.
சாதி : இந்து, கள்ளர்.
வகித்த பதவி : திருச்சி மாநகராட்சி மேயர் (2001-09).
தேர்தல் அனுபவம் : 2009, 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.
அரசியல் பணி : காங்கிரஸ் ,த.மா.கா, அதிமுகவில் இருந்த இவர்,
தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலராக உள்ளார்.
தொழில் : திருச்சியில் மெட்ரிக். பள்ளி, இயற்கை விவசாயம் உள்ளிட்ட தொழில்கள்.


கரூர்
பெயர்: என். தங்கவேல்.
பெற்றோர் : பிஎஸ்.நல்லுசாமி - ராசம்மாள்.
சகோதரர் : என். சந்திரவேலு.
படிப்பு: பி.டெக்.
பிறந்த தேதி : 8.11.1967.
இனம் : கொங்கு வெள்ளாளர்
மனைவி: டி.பிரபா, மகள்: டி.காருண்யா, மகன்: டி. கார்த்திகேயன்.
சொந்த ஊர்: அரவக்குறிச்சி அடுத்த வெஞ்சாமாங்கூடலூர் பாரப்பட்டி. தற்போது கரூர் மகாத்மா நகரில் செந்தூரில் வசித்து வருகிறார்.
தொழில்: விவசாயம், ஜவுளி ஏற்றுமதி.


சிதம்பரம் (தனி)
பெயர் : ஆ. இளவரசன்(54),
பெற்றோர் : ஆறுமுகம் - செல்லம்மாள்
சொந்த ஊர் : பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம்
அருகேயுள்ள சண்முக நகர். பிறந்த தேதி : 8.8.1965.
படிப்பு : எம்.எஸ்.சி., பி.எட்., எம்.பில்., பிஎச்டி., எல்.எல்.பி., எல்.எல்.எம். பெரம்பலூரில் பிரின்ஸ் ஐஏஎஸ் அகாதெமி பயிற்சி மையம்
நடத்தி வருகிறார். அமமுக-வில் பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி கணேசன் ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல்
இயக்குநராக உள்ளார். ஹர்சினி என்ற மகள் உள்ளார்.


மயிலாடுதுறை

பெயர் : சி.செந்தமிழன்.
பெற்றோர் : பி. சிவப்பிரகாசம், சி. அழகுரோஜா.
படிப்பு : இளம் வணிக நிர்வாகவியல் படிப்பைப் படித்துள்ளார்.
2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை அதிமுக மாவட்ட மாணவர் அணி செயலாளராகவும், 2007 முதல் 2011 வரை அதிமுக மயிலாடுதுறை நகரச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக
நாகை வடக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.


சிவகங்கை

பெயர் : தேர்போகி வே.பாண்டி
பிறந்த தேதி : 26.11.1975
கல்வி தகுதி : எம்பிஏ
தந்தை: மு. வேலு அம்பலம்
தாய் : காந்தி அம்மாள்,
முன்னாள் கண்ணங்குடி ஒன்றிய கவுன்சிலர்
(2006 முதல் 2011 வரை)
தொழில் : பூமிகா மோட்டார்ஸ் (ஸ்வராஜ் ட்ராக்டர் ஷோரூம்) உரிமையாளர்
சொந்த ஊர் : சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை வட்டம் அருகே
உள்ள தேர்போகி
தற்போது வசிப்பது : காரைக்குடி
மனைவி : செல்வி பாண்டி,கண்ணங்குடி ஒன்றியத்தின் தலைவர்
(2011 முதல் 2016 வரை)
அரசியல் அனுபவம் : 1992 முதல் அதிமுகவில் கட்சிப் பணி. 1994 லிருந்து 2000 வரை கண்ணங்குடி ஒன்றிய மாணவரணி செயலராகவும்,2004 லிருந்து 2009 வரை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலராகவும்,2009 லிருந்து 2018 வரை மாவட்ட இளைஞரணி செயலராகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போதைய பதவி: அமமுக ஜெ பேரவை மாவட்ட செயலாளர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Tamil Nadu
Top