படிக்கும் வயதில் சிறுவன் செய்த வேலை அவரை போக்ஸோ வழக்கில் சிறையில் அடைந்துள்ளது.
16 Year Old Girl Sexually Harassed: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை சரகத்தில் கிராமம் ஒன்று உள்ளது.
இந்த கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுவன் சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பாலியல் தொல்லை:
சிறுமியின் வீட்டுக்கதவை தட்டி சிறுமியை அழைத்த நிலையில், சிறுமி கதவை திறந்ததும் அவரை வீட்டுக்குள் தள்ளிய சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி அலறிய நிலையில், சிறுவன் அங்கிருந்து பதறியபடி ஓட்டம் பிடித்து இருக்கிறான்.

போக்ஸோவில் கைது:
பின் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!

