Dailyhunt
45 லட்சத்திற்காக  காதலனின் பேச்சை கேட்டு  மகள் செய்த கொடூரம்! நள்ளிரவில் அரங்கேற்றிய அதிர்ச்சி... ஃப்ரீசர் பாக்ஸில் வளர்ப்புத் தாய்! இறுதியில் அம்பலமான உண்மை பின்னணி!!!

45 லட்சத்திற்காக காதலனின் பேச்சை கேட்டு மகள் செய்த கொடூரம்! நள்ளிரவில் அரங்கேற்றிய அதிர்ச்சி... ஃப்ரீசர் பாக்ஸில் வளர்ப்புத் தாய்! இறுதியில் அம்பலமான உண்மை பின்னணி!!!

Tamil Spark 1 week ago

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சொத்து மற்றும் காதல் காரணமாக வளர்ப்புத் தாயைக் கொன்ற 17 வயது சிறுமி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய இந்தக் கொலை, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு நடந்த விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணமும் காதலும்... திட்டமிட்ட முடிவு

ராஞ்சியின் மணிடோலா பகுதியில் வசித்த நஹிதா பர்வீன், கணவர் இறந்த பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகையான 45 லட்ச ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். தகவலின்படி, அவரது வளர்ப்பு மகள் தனது 20 வயது காதலன் அர்பாஸுக்கு அடிக்கடி பணம் வழங்கி வந்துள்ளார். இதை பர்வீன் கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு அதிகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளம் ஜோடி, பர்வீன் தங்களது வாழ்க்கைக்கு தடையாக இருப்பதாகக் கருதி அவரை நீக்க முடிவு செய்துள்ளனர்.

எலும்புக்கூடாக 2 வயது குழந்தை.. உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் கொன்று வீசிய தாய்.. மதுரையில் கோரம்.!

நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்

ஏப்ரல் 24-ம் தேதி நள்ளிரவில் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. பர்வீன் தூங்கிக் கொண்டிருந்தபோது, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் சிறுமி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஒருவர் தலையணையால் முகத்தை அழுத்த, மற்றவர்கள் கைகால்களை பிடித்தனர். போராடிய நிலையில் பர்வீனின் கழுத்தில் காயம் ஏற்பட்டு, ரத்தப்போக்கால் உயிரிழந்தார். பின்னர் சடலம் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது. மறுநாள், குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக உறவினர்களிடம் கூறி இறுதிச் சடங்குகளும் முடிக்கப்பட்டன.

சந்தேகத்தில் தொடங்கிய விசாரணை

இறுதிச் சடங்கின்போது கழுத்தில் இருந்த காயத்தை பார்த்த உறவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், சிறுமி சொத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து பீகாரில் மறைந்திருந்த காதலன் அர்பாஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த ராஞ்சி கொலை வழக்கு குறித்து போலீஸார் மேலான விசாரணை நடத்தி வருகின்றனர்.

உன்னோட சந்தேக புத்தி மாறவே மாறாது.... நள்ளிரவில் பெட்ரூமில் அரங்கேறிய கொடூரம்! மது போதையில் தூங்கிய கணவரை கயிற்றால்..... மனைவியின் மாஸ்டர் பிளான்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark