Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐயோ பாவம்.. திருடன் என நினைத்து அப்பாவி வடமாநில இளைஞர் அடித்துக்கொலை.. வேலூரில் சோகம்.!

ஐயோ பாவம்.. திருடன் என நினைத்து அப்பாவி வடமாநில இளைஞர் அடித்துக்கொலை.. வேலூரில் சோகம்.!

Tamil Spark 1 month ago

க்களின் பயம் தொடர்பான சந்தேகத்தில் வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது.

தாக்குதல் சம்பவம்:

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகள், விவசாய பணிகளுக்காக வடமாநில இளைஞர்கள் பலரும் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வேலை இல்லாத நாட்கள் மற்றும் வார இறுதிகளில் வேலூர் நகரில் சுற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது, மக்களின் திருட்டு பயம் தொடர்பான சந்தேகத்தில் இவர்கள் தாக்கப்படும் சூழலும் நடந்து வருகிறது.

3 வயது சிறுமி நாய் தாக்கி பலி.. 2 நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. கண்ணீர் சோகம்.!

இளைஞர் படுகாயம்:

இதனிடையே, கடந்த ஜூன் 07ம் தேதி காட்பாடி, தாராபடவேடு குளத்துக்கரை தெருவில் 30 வயதுடைய வடமாநில இளைஞர் அப்பகுதியை சேர்ந்த சிலரால் கற்கள் கொண்டு தாக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காட்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

தாக்குதல் சம்பவம்:

இதனிடையே, வேலூர் காகிதப்பட்டறை, செல்லியம்மன் கோயில் தெருவில் ஒருவர் சுற்றிவந்துள்ளார். பின் ஒரு வீட்டின் சுவரின் அருகில் உட்கார்ந்து இருந்துள்ளார். இதனால் அவர் திருட வந்ததாக நினைத்து உள்ளூர் மக்கள் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் காவல் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இளைஞர், கழிவறைக்குச் சென்றபின் உயிரிழந்தார்.

3 பேரிடம் விசாரணை:

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் மேற்குவங்கம் மாநிலம் ஜல்பைக்குரி பகுதியில் வசித்து வரும் ஹொய்ஹிந்த் முண்டா (வயது 35) என்பது தெரியவந்தது. இவரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை.. நாகப்பட்டினத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark