Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அதிமுக MLA-க்கள் திடீர் ராஜினாமா.....இது அரசியல் நடைமுறை அல்ல! மறைமுக ஆதரவு தவெக? போட்டுடைத்த CPM...!!!

அதிமுக MLA-க்கள் திடீர் ராஜினாமா.....இது அரசியல் நடைமுறை அல்ல! மறைமுக ஆதரவு தவெக? போட்டுடைத்த CPM...!!!

Tamil Spark 3 months ago

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் அரசியல் நகர்வுகள் குறித்து சிபிஎம் மூத்த தலைவர் பெ.

சண்முகம் விமர்சனம் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு கட்சி மாறுவது ஜனநாயக அரசியல் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

தவெக தலைமையிடம் ஏற்கனவே வலியுறுத்தல்

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைமையிடம் சிபிஎம் ஏற்கனவே தனது கருத்தை தெரிவித்திருந்ததாக பெ. சண்முகம் கூறினார். அதற்கு பதிலளித்த தவெக தரப்பு, "எம்.எல்.ஏ.க்கள் தாங்களாகவே ராஜினாமா செய்து வருவதை எங்களால் தடுக்க முடியாது" என்று விளக்கம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்தடுத்த அதிர்ச்சியில் விஜய்! தவெகவில் இருந்து விலகிய கையோடு திமுகவுடன் கூட்டணி இணைவு..... தமிழக அரசியல் சூழலில் புதிய விவாதம்!!!

கட்சித் தாவலை ஊக்குவிக்கக் கூடாது

இருப்பினும், பதவியை ராஜினாமா செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளை புதிய கட்சியில் இணைத்துக் கொள்வது, கட்சித் தாவலை மறைமுகமாக ஊக்குவிக்கும் செயலாகவே பார்க்கப்படும் என்று சிபிஎம் அப்போதே எச்சரித்ததாக அவர் தெரிவித்தார். அந்த நிலைப்பாட்டில் தற்போது எந்த மாற்றமும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

அரசியல் வட்டாரத்தில் விவாதம்

தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றன. பெ. சண்முகம் வெளியிட்டுள்ள இந்த கருத்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் ட்விஸ்ட்! துணை முதல்வர் பதவி... முதல்வர் விஜய் போன் காலில் சொன்ன அந்த ஒரு வார்த்தை! சீக்ரெட்டை உடைத்த திருமாவளவன்....!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark