Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அதிமுக தலைமைக்கு ஷாக்.. திமுகவில் இணைந்தது ஏன்? Ex எம்எல்ஏ வெங்கட்ராமன் பரபரப்பு பேட்டி.!

அதிமுக தலைமைக்கு ஷாக்.. திமுகவில் இணைந்தது ஏன்? Ex எம்எல்ஏ வெங்கட்ராமன் பரபரப்பு பேட்டி.!

Tamil Spark 2 weeks ago

நிலையான தலைமையில் கீழ் வேலை செய்யவும், தமிழினத்துக்கு சேவை செய்யவும் திமுகவில் இணைந்ததாக வெங்கட்ராமன் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்தார்:

சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன். இவர் அதிமுகவில் நிகழ்ந்து வரும் உட்கட்சி குழப்பம் காரணமாக அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், இன்று சற்றும் எதிர்பாராத வகையில் திமுகவில் இணைந்தார்.

விஜயின் ஆட்சிக்கு எதிர்ப்பு? மௌனம் களைத்த மு.க. ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா?

அரவணைத்தார்கள்:

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் வந்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்ட முன்னாள் எங்கள்.எல்.ஏ வெங்கட்ராமன், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "அன்புள்ளதோடு என்னை வரவேற்று அரவணைத்துக்கொண்டார்கள்.

மனம் ஆவல்:

அவர்களுடன் நான் எப்போதும் உறுதியாக இருப்பேன். நிலையான, குழப்பமற்ற தலைமையுடன் பணியாற்ற எனது மனம் ஆவலாக இருக்கிறது. இன்று முதல் கழகப்பணியை சீரும் சிறப்புக்காக செய்வேன். அதிமுகவில் நடப்பது ஊரறிந்த விஷயம். அதனை நான் சொல்லத்தேவையில்லை.

நிலையான தலைமை. நிலையான தலைமையின் கீழ் வேலை செய்ய வேண்டும், தமிழினத்துக்கு சேவை செய்ய வேண்டும். மீண்டும் கழகத்தின் ஆட்சி மலர வேண்டும். தலைவர் ஆட்சி மீண்டும் மலர வேண்டும்" என பேசினார்.

திமுக தலைமைக்கு ஷாக்.. திருப்பூர் மாவட்ட செயலாளரின் திடீர் முடிவு.. அடுத்தது என்ன?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark