Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!

அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!

Tamil Spark 2 months ago

திமுகவில் தலைமை மாற்றம் தொடர்பான பேச்சுகள் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேநேரத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணி பெயர் தீவிரமாக பேசப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுகவில் உள்கட்சி ஆலோசனைகள் தீவிரம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கட்சியின் எதிர்கால தலைமை அமைப்பு குறித்து மூத்த நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING: அதிமுக தலைமையில் அதிர்ச்சி.... எஸ்.பி.வேலுமணி, சி. வி.சண்முகம் உட்பட6 MLA-க்கள் திடீர் மாயம்..? அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!

இதையடுத்து, இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினரும் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடு மற்றும் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் திசை குறித்து இந்த சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் சந்திப்பு தகவல் பரபரப்பு

இதற்கிடையில், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யை சந்திக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.

அதிமுகவில் தலைமை மாற்றம் தொடர்பான பேச்சுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கட்சியின் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark