Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அவரைக் காப்பாற்றுங்கள்... கத்தி கூச்சலிட்ட பெண்! எடப்பாடியை காண வந்த அதிமுக வட்ட செயலாளர்கு  நடந்த அதிர்ச்சி....! பகீர் வீடியோ..!!!

அவரைக் காப்பாற்றுங்கள்... கத்தி கூச்சலிட்ட பெண்! எடப்பாடியை காண வந்த அதிமுக வட்ட செயலாளர்கு நடந்த அதிர்ச்சி....! பகீர் வீடியோ..!!!

Tamil Spark 3 days ago

வேலூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமியை காண வந்த அதிமுக வட்டச் செயலாளர் காமராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவர், விழா நடைபெற்ற இடத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமியை காண வந்தபோது திடீர் மயக்கம்

வேலூரில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றிருந்தார். அவரைக் காண்பதற்காக அரப்பாக்கம் பகுதி அதிமுக வட்டச் செயலாளர் காமராஜும் விழா அரங்கிற்கு வந்திருந்தார்.

நீண்டகால அரசியல் அவுட்! அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்....! செம குஷியில் எடப்பாடி..!!!

அப்போது எதிர்பாராதவிதமாக காமராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்த பெண் ஒருவர் பதற்றமடைந்து, அவரைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டு உதவி கேட்டார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழப்பு

இதையடுத்து அங்கிருந்தவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே காமராஜ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

https://www.instagram.com/reel/DcvfLHVkTrU

மாரடைப்பால் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணை

காமராஜின் திடீர் மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் 5 அதிமுக MLA-க்கள் ராஜினாமா? செப்.8-ல் வெடிக்கப்போகும் பூகம்பம்...! அதிர்ச்சியில் அல்லேலப்படும் எடப்பாடி!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark