Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING: 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. சென்னையில் பேரதிர்ச்சி.. வடமாநில 5 பேர் கும்பல் வெறிச்செயல்..!

#BREAKING: 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. சென்னையில் பேரதிர்ச்சி.. வடமாநில 5 பேர் கும்பல் வெறிச்செயல்..!

Tamil Spark 2 weeks ago

மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

டீ குடிக்க வந்தார்:

Chennai Gang Rape News: சென்னையில் உள்ள வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மூதாட்டி பிரியாணி கடை ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில், அவர் இன்று காலை கடையில் இருந்து ரெபிடோ உதவியுடன் டீக்கடை ஒன்றுக்கு டீ குடிக்க வந்துள்ளார்.

ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!

கூட்டுப்பாலியல் பலாத்காரம்:

அச்சமயம், மூதாட்டியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மூதாட்டி ரத்த காயத்துடன் மயங்கி இருந்துள்ளார்.

மருத்துவமனையில் உறுதி:

அதிகாலை 3 மணிக்கு துயரம் நடந்த நிலையில், விடிந்ததும் பொதுமக்கள் ரத்த காயத்துடன் இருந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மூதாட்டியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது பாலியல் வன்கொடுமையை உறுதி செய்துள்ளனர்.

2 பேர் கைது, 3 பேர் வலைவீச்சு:

இதனையடுத்து, தகவல் அறிந்த வேளச்சேரி காவல்துறையினர் சிசிடிவி கேமிரா உதவியுடன் 2 வடமாநில நபர்களை கைது செய்தனர். மேலும், 3 பேருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் தலைநகரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark