Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இன்று அமாவாசை.. மாலைக்குள் இதை கண்டிப்பாக பண்ணிடுங்க..!

இன்று அமாவாசை.. மாலைக்குள் இதை கண்டிப்பாக பண்ணிடுங்க..!

Tamil Spark 3 months ago

மாவாசை இன்று மாலை முடிகிறது. அதற்குள் தெய்வங்களை வணங்குங்கள்.

இந்து மத நம்பிக்கையின்படி ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

இதில் அமாவாசை நாள் ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய புண்ணியத்தை தரும் நாள் என்பதால், இன்று வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நல்ல ஆற்றலை அதிகரிக்கும் என்பது ஆன்மீக வல்லுனர்களின் நம்பிக்கை. அதேபோல, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பூஜை அறையில் தீபமேற்றி வழிபடுவது, ஏழைகளுக்கு தானங்கள் செய்வது சிறந்தது. முக்கியமாக, இன்று சைவ உணவை கடைபிடித்து, விரதம் இருந்தால் மனஅமைதி கிடைக்கும். இந்த நாளினை எளிமையாகவும், அமைதியாகவும் கடைபிடிக்கலாம்.

புண்ணியம் தரும்:

அமாவாசை நாளில் இந்து நம்பிக்கையின்படி பித்ரு தர்ப்பணம் செய்வது புண்ணியம் தரும். முன்னோர்களின் ஆன்மா வீட்டில் அமைதியாக இருக்கவும், குடும்பத்தின் நல்ல எதிர்காலத்துக்கு உறுதுணையாக இருக்கவும் தர்ப்பணம் புண்ணியம் தரும். அமாவாசை புதிய தொடக்கத்துக்கான அமைதியான நல்ல நேரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமாவாசை நாளில் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி தேவதைகளை நினைத்து வழிபட வேண்டும்.

கார்த்திகை மாத பௌர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?.!

அன்பு-ஆசி கிடைக்கும்:

அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, அவர்களின் அன்பையும் - ஆசியையும் பெற்றுத்தரும். மிகவும் எளிமையாக முன்னோர்களுக்கு தண்ணீர், எள்ளு ஆகியவற்றை படைத்தும் தர்ப்பணம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை, வளம் மேலோங்கும். முன்னோர்களை நினைத்து நன்றி செலுத்தவும் இது நல்ல நாள் ஆகும். ஏழை எளிய மக்களுக்கு உணவு, ஆடை தானமாக வழங்கலாம். இது வாழ்க்கையில் சிறந்த பலனை தரும். இந்த நாளில் உணவில் எளிமையை கடைபிடித்து, சைவ வகை உணவுகளை சாப்பிடலாம். இதனால் உடல் மனம் நலம்பெறும். சண்டைகள், கோபமும் தவிர்க்கப்பட வேண்டியது.

பூஜை செய்ய வேண்டிய நேரம்:

இன்று அமாவாசை ஏப்ரல் 16, இரவு 08:11 மணியில் தொடங்கி ஏப்ரல் 17 மாலை 05:21 வரை நீடிக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் பூஜை செய்து தெய்வங்களை வணங்கலாம். காலை நல்ல நேரத்தை தவறவிட்டவர்கள், மாலை 04:30 முதல் 05:30 க்குள் பூஜை செய்து தெய்வங்களை வழிபடலாம். 05:21 க்குள் பூஜை செய்வது சிறப்பு.

Maha Shivaratri: மகா சிவராத்திரி 2026.. விரதத்தின் பலன்கள் கிடைக்க இதெல்லாம் கட்டாயம்..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark