Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரவில் தூங்கும் போது 14 வயது சிறுமியிடம் யாரோ அத்துமீறின உணர்வு! சட்டுனு விழித்து பார்த்தப்போது.... பக்கத்தில் இருந்த அந்த ஒரு நபர்! இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவா? பெற்றோர்களே உஷார்!!!

இரவில் தூங்கும் போது 14 வயது சிறுமியிடம் யாரோ அத்துமீறின உணர்வு! சட்டுனு விழித்து பார்த்தப்போது.... பக்கத்தில் இருந்த அந்த ஒரு நபர்! இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவா? பெற்றோர்களே உஷார்!!!

Tamil Spark 1 month ago

காராஷ்டிர மாநிலம் புனேவில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த டியூஷன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, பொதுமக்கள் அந்த ஆசிரியரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

காத்ரஜ் ஆம்பேகான் பத்தர் பகுதியைச் சேர்ந்த ஆரிப் சையத் என்பவர் தனியார் டியூஷன் மையம் நடத்தி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சிறு வயதிலிருந்தே அவரிடம் படித்து வந்ததால், ஆசிரியருக்கும் குடும்பத்தினருக்கும் நெருக்கமான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையை பயன்படுத்தி, கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகளின்போது சிறுமியிடம் அத்துமீறல் செய்ய முயன்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் வீடு புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி! அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!!

வீட்டில் தங்கியபோது நடந்ததாக கூறப்படும் சம்பவம்

மூன்று வாரங்களுக்கு முன்பு ஆன்லைன் மதரஸா வகுப்பிற்காக ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற சிறுமி, இரவு நேரமாகிவிட்டதால் அங்கேயே தங்கியதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் யாரோ தன்னை தவறான முறையில் தொடுவதை உணர்ந்து விழித்தபோது, அருகில் ஆசிரியர் இருந்ததாக சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதன் பின்னர் மன உளைச்சலில் இருந்த சிறுமியிடம் அவரது அக்கா பேசியபோது நடந்ததை அவர் தெரிவித்துள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்ட நிலையில், ஆசிரியரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த தாய்! வீடு திரும்பியபோது 4 வயது மகளுக்கு நடந்த கொடூரம்....தனியாக தவித்த பிஞ்சு குழந்தை !!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark