Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இதுதான் காரணம்... மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 திடீர் நிறுத்தம்? சிக்கலை உடனே சரிசெய்யுங்க...!!!

இதுதான் காரணம்... மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 திடீர் நிறுத்தம்? சிக்கலை உடனே சரிசெய்யுங்க...!!!

Tamil Spark 4 days ago

மிழகம் முழுவதும் பல ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான காரணங்கள் குறித்து பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வங்கி கணக்கு தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்காதது முக்கிய காரணமாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அரசு மேற்கொண்ட தகுதி சரிபார்ப்பில் சில குடும்பங்கள் விதிமுறைகளுக்கு உட்படாதது தெரியவந்ததால், குறிப்பிட்ட பயனாளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஷாக் நியூஷ்...மகளிர் உரிமைத் தொகை.... தவெக அரசின் அதிரடி நடவடிக்கை! விரிவாக்கத்துக்கு முன் களையெடுப்பு..!!!

இ-கேஒய்சி புதுப்பிக்காததால் சிக்கல்

உரிமைத்தொகை பெற்றுவந்த பலரது வங்கிக் கணக்குகளில் இ-கேஒய்சி எனப்படும் ஆதார் மற்றும் வங்கி விவரப் புதுப்பிப்பு பணிகள் முழுமையாக செய்யப்படாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தகுதியுள்ள சிலருக்கும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை தொடர்ந்து கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கி கணக்கு மற்றும் ஆதார் தொடர்பான தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை பயனாளர்கள் சரிபார்த்து, தேவையான ஆவணங்களைப் புதுப்பிப்பது அவசியமாகியுள்ளது.

தகுதி நீக்கத்துக்கும் காரணம் உண்டு

அரசின் தகுதி சரிபார்ப்பு நடவடிக்கையின்போது, பயனாளர்களின் குடும்பத்தில் அரசு ஊழியர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விதிமுறைகளுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலர் உரிமைத்தொகை பெறும் தகுதியை இழந்துள்ளனர்.

மீண்டும் தொகை கிடைக்க வாய்ப்பு

எனினும், ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்களைப் புதுப்பிக்காத காரணத்தால் மட்டும் தொகையை இழந்த தகுதியானவர்கள், தேவையான பணிகளை முறையாக முடித்தால் மீண்டும் ரூ.1,000 உரிமைத்தொகை பெற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே பயனாளிகளாக இருந்து தற்போது தொகை வராதவர்கள், தங்களது ஆதார் மற்றும் வங்கி விவரங்களின் நிலையை சரிபார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

யாராவது வாங்க... அதிகாலை வீட்டில் கேட்ட 9 வயது சிறுமியின் அலறல் சத்தம்...! பின்புறம் தப்பி சென்ற கொடூரன்... வசமாக சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark