Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!

கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!

Tamil Spark 4 months ago

ஞ்சா கும்பலின் அட்டகாசத்தை தட்டிக்கேட்ட கர்ப்பிணி பெண், அவரின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சமூகவிரோத செயல்:

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி காவல்நிலையத்துக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜ். இவரின் மனைவி அருள்மொழி, கர்ப்பிணியாக இருக்கிறார். இதனிடையே, இந்த பகுதியில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

#Breaking: ஓடும் பேருந்தில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. சம்பவ இடத்திலேயே சோகம்..!

கஞ்சா விற்பனை:

அதாவது, இரவு நேரத்தை குறிவைத்து கஞ்சா போதை ஆசாமிகள் விற்பனை செய்வது, கஞ்சா போதையில் உள்ளூர் மக்களிடம் தகராறு செய்வது என இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

கர்ப்பிணி மீது தாக்குதல்:

சம்பவத்தன்று இரவில் கஞ்சா போதையில் சுற்றிய இளைஞர்களை தர்மராஜ் மற்றும் அவரது மனைவி அருள்மொழி கண்டித்து இருக்கின்றனர். இதனால் போதை கும்பல் தம்பதிகளை தாக்கி இருக்கிறது. அருள்மொழியை கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விஷயம் குறித்து சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கர்ப்பிணி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ:

வீடியோ நன்றி: பாலிமர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark