Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காதல் திருமண விவகாரத்தில் சரமாரி தாக்குதல் பயங்கர சண்டை.. அலறிய பெண்.. பதறவைக்கும் வீடியோ & தாக்குதல் காட்சிகள்.!

காதல் திருமண விவகாரத்தில் சரமாரி தாக்குதல் பயங்கர சண்டை.. அலறிய பெண்.. பதறவைக்கும் வீடியோ & தாக்குதல் காட்சிகள்.!

Tamil Spark 2 weeks ago

பேயன்விளை கிராமத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

அக்கம் - பக்கத்து வீடு:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, மேல லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பரமசிவம்.

இவரின் மனைவி ரேவதி. இவரின் மகன் கெளதம். இவர்களின் வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் மகள் சௌமியா. பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரின் மகன் தினேஷ்.

கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!

காதல் திருமணம்:

தினேஷும் - சௌமியாவும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரத்தை அறிந்த சௌமியாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில். காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துகொண்டது.

வாக்குவாதம்:

இதனிடையே, பரமசிவம் ஆறுமுகம் எஸ்.ஆர் நகர் பகுதியில் புதிய வீடுகட்டி புதுமனை புகுவிழா நடத்தி இருக்கிறார். மதிய வேளையில் அங்கு வந்த சௌமியாவின் தாய் லதா, சகோதரி பரமசக்தி ஆகியோர் மகள் வீட்டை விட்டு வெளியேற பரமசிவம் காரணம் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஆட்களை அழைத்து வந்து கொடுமை:

இந்த சம்பவம் குறித்து கெளதம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, பலன் இல்லை. பின் மாலை நேரத்தில் லதா மற்றும் 10 பேர் சேர்ந்து பரமசிவத்தின் வீட்டுக்கு வந்து அடாவடி செய்து இருக்கின்றனர். கெளதம் மீது நடந்த தாக்குதலில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாமியாரின் மூக்கை வெட்டி கையில் எடுத்துச் சென்ற மருமகன்.. குடும்ப தகராறில் கொடூரம்.!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark