Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

Tamil Spark 6 months ago

ள்ளக்காதலை கண்டித்த சித்தப்பா, மகள் உறவுமுறைகொண்ட பெண்ணை வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

காதல் திருமணம்:

Woman Murdered in Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை, தலக்குளம், குலாளர் தெருவில் வசித்து வருபவர் அருணபிரசாத் (வயது 33). இவரின் மனைவி சபிதா (வயது 28). தம்பதிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் 9, 5 வயதுடைய 2 மகன்கள் இருக்கின்றனர். கார்பன்டராக அருண்பிரசாத் வேலை பார்த்து வந்த நிலையில், சபிதா நாகர்கோவிலில் செயல்படும் துணிக்கடையில் வேலை பார்க்கிறார்.

கள்ளக்காதலுக்கும் மதம் மாறனும்.. கணவனை விட்டு ஓடிய 28 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

கள்ளக்காதல் பழக்கம்:

அப்போது, சபிதாவுக்கும் - தும்பவிளை காலனியில் வசித்து வந்த அனீஸ் (வயது 30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், செல்போன் நம்பரை மாறி அடிக்கடி பேசி இருக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த அருணபிரசாத், மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து இருக்கிறது.

அறிவுரை கூறியதில் தகராறு:

ஒருகட்டத்தில் காதல் கணவரின் மீது வெறுப்படைந்த சபிதா, தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். தாய் வீட்டுக்குச் சென்றபின்னரும், அனீஸுடன் கொண்ட தொடர்பை கைவிடவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் இருவரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். இதனை கவனித்த சுபிதாவின் சித்தப்பா ராஜேஷ் (வயது 45), அவரை கண்டித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மாறி-மாறி தாக்கிக்கொண்டுள்ளனர்.

ஆத்திரத்தில் வெறிச்செயல்:

மாற்றுத்திறனாளியான ராஜேஷ் ஒருகட்டத்தில் கீழே விழுந்த நிலையில், ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வந்து சுபிதாவின் தலை, கை-கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்தகாயத்துடன் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்ற சுபிதா மீண்டும் காலையில் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் ரத்தம் வெளியேறி சடலமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து வந்த இரணியல் காவல்துறையினர், சபிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சபிதா மறைந்த தகவல் அறிந்த ராஜேஷ், நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark