Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
லிஸ்ட் ரெடி.... 6 அமைச்சர்களின் பதவி பறிப்பு? CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி ஆக்க்ஷன்...! கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்!!!

லிஸ்ட் ரெடி.... 6 அமைச்சர்களின் பதவி பறிப்பு? CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி ஆக்க்ஷன்...! கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்!!!

Tamil Spark 2 weeks ago

மிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என கோட்டை வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

செயல்பாடு திருப்திகரமாக இல்லாததாக கருதப்படும் 4 முதல் 6 அமைச்சர்களின் பதவிகளை பறிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர்கள் தரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செயல்திறன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை

தலைமைச் செயலகத்தில் இருந்து பெறப்படும் செயல்திறன் அறிக்கைகள் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக துறைகளின் செயல்பாடு, மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உங்க ஆட்டத்தை அடக்குறேன்! உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் CM விஜய்! தவெக- வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்...!!!

புதிய அமைச்சர்களுக்கான பட்டியல் தயாரா?

இதற்கிடையே, இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் மூத்த எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் அடங்கிய புதிய அமைச்சர்கள் பட்டியல் தயாராக இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

எனினும், பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ள அமைச்சர்கள் யார், புதிதாக யாரெல்லாம் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளனர் என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு அமைச்சரவை மாற்றம் தொடர்பான முடிவுகள் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அவுங்களுக்கு மட்டும் தானா... எங்களுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும்! பாமக எம்எல்ஏ கணேஷ் பேச்சால் சிரிப்பில் மூழ்கிய சட்டப்பேரவை...! CM ரியாக்ஷன் தான் ஹைலைட்.. வைரல் வீடியோ!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark