Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மக்களே வெளியே வராதீங்க.... அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

மக்களே வெளியே வராதீங்க.... அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

Tamil Spark 1 week ago

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, பெரம்பலூர், கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை

இதற்கிடையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்கனவே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களே வெளியே வராதீங்க..... இந்த 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark