இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பக்கத்து வீடு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.டி.சி. நகரில் வசித்து வருபவர் கிருஷ்ண குமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணகுமாரின் மனைவி பிருந்தா தேவி (வயது 32). தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தம்பதிகளின் பக்கத்து வீட்டில் மாரிமுத்து (வயது 43) என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி பிரியா. தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

கள்ளகாதலனின் வீட்டில் தனிமை:
மாரிமுத்து - பிருந்தா தேவி இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியதாக தெரியவருகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் மாரிமுத்துவின் மனைவி பிரியா வெளியே சென்றபோது, பிருந்தாதேவி மாரிமுத்துவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு கள்ளக்காதல் ஜோடி தனிமையில் இருந்துள்ளது.

நேரில் பார்த்த ஆத்திரத்தில்..
இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பிரியா வீட்டுக்குத் திரும்பிய நிலையில், பிருந்தாதேவியும் - கணவரும் நெருங்கியதை பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியா பிருந்தாதேவியை தாக்கி வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் பிரியா பிருந்தாதேவியின் கழுத்தை நெரித்துள்ளார். இந்த சம்பவத்தில் பிருந்தாதேவி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிருந்தாதவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, பிரியா ஆகியோரை கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

