Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!

Tamil Spark 1 month ago

தாயின் பராமரிப்பில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய தவெக நிர்வாகி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வாந்தி எடுத்த பெண்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் அருகில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தாயின் பராமரிப்பில் 25 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாகவே 25 வயதுடைய இளம்பெண் வாந்தி எடுத்து வந்துள்ளார்.

Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

பெண் கர்ப்பம்:

இதனால் மகளை மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனையில் பெண்மணி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின் இந்த விஷயம் குறித்து மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார்.

தவெக நிர்வாகி கைது:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த தவெக நிர்வாகி மணிகண்டன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும், மணிகண்டன் கடந்த 3 மாதங்களாக பெண்ணை வன்கொடுமை செய்து வந்ததும் உறுதியானது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark