Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாதுளைப்பழ பிரியர்களே... இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. மிககவனம்.!

மாதுளைப்பழ பிரியர்களே... இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. மிககவனம்.!

Tamil Spark 1 month ago

தய நோய், உடலின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கு மாதுளைப்பழம் நல்லது. ஆனால், அதனை அதிகம் சாப்பிட கூடாது.

உடலின் செல்களுக்கு பாதுகாப்பு:

மாதுளைப்பழமும் அதன் விதைகளும் ஏராளமான ஆரோக்கியம் நிறைந்தவை ஆகும். இது பல நாடுகளில் உணவாகவும், மருந்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் கொண்ட மாதுளை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது ஆகும். இதில் இருக்கும் வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், நாசத்து, போலேட் உடலுக்கு நன்மைகளை வழங்குகிறது. மாதுளையின் விதையில் இருக்கும் பாலிபீனால், ஆண்டி-ஆக்சிடன்ட் உடலின் செல்களை பாதுகாக்கும்.

Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!

ரத்த ஓட்டம் சீராகும்:

மாதுளைப்பழம் குறைந்த கொழுப்புசத்து கொண்டது ஆகும். இது உடலுக்கு சக்தி, புத்துணர்ச்சியை வழங்கும். தினமும் உணவில் மாதுளையை சேர்த்துக்கொண்டால் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். நமது இதயத்தை பாதுகாக்கும் பழங்களில் மாதுளைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. மாதுளையின் சாறு ரத்த ஓட்டத்தை சீராக்க உதவி செய்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதனை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இரத்த நாளத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவி செய்கிறது.

இதயத்துக்கு நல்லது:

உடலுக்கு கெடுத்தரும் கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தை குறைத்து, இரத்த நாளத்தில் அடைப்பு உண்டாகாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் இதயம் சார்ந்த நோய்கள் குறைவாகவே ஏற்படும். உடலின் நீண்டகால அலர்ஜி பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமையும். மாதுளையில் காணப்படும் இயற்கை சேர்மங்கள் அதனை கட்டுப்படுத்தும். மூட்டுவலி, நீரிழிவு நோய், இதய நோய் தொடர்பான பிரச்சனைகளுக்கும் மாதுளை தீர்வு தரும். இது நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்தி உடலை எப்போதும் கவனமாக பார்த்துக்கொள்ளும்.

உடற்பயிற்சிக்கு உறுதுணை:

உடற்பயிற்சி செய்துவரும் நபர்களுக்கு மாதுளைப்பழம் சக்தி தரும் உணவு ஆகும். இதன் சாறு ஆக்சிஜனை உடலுக்கு வழங்கி தசையில் ஏற்படும் சோர்வை கட்டுப்படுத்துகிறது. உடற்பயிற்சிக்கு முன் மாதுளைச்சாறு குடிப்பது நீண்டநேர சுறுசுறுப்புக்கு வழிவகை செய்யும். மாதுளையின் முழு விதைகளில் நார்சத்து அதிகம். இது செரிமானத்துக்கு மிகப்பெரிய உதவி செய்கிறது. மாதுளை சாறில் ஆண்டி-ஆக்சிடன்ட் அதிகம். இதனால் மாதுளைச் சாறில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது.

மாதுளை அனைவருக்கும் உகந்தது எனினும், சில மருந்துகள் உட்கொள்வோர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதனை எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில், மாதுளையை அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனையும் ஏற்படும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark