Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை.. நாகப்பட்டினத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.!

மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை.. நாகப்பட்டினத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.!

Tamil Spark 2 months ago

80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

சடலமாக மீட்பு:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அண்ணா சிலை, மீன் மார்க்கெட்டில் 80 வயதுடைய மூதாட்டி முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தார்.

இந்த விஷயம் குறித்து வெள்ளிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தகவல் அறிந்து நேரில் வந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

மீன் வியாபாரி:

மூதாட்டியின் முகத்தை நாய் கடித்துகுதறி இருந்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண்மணி வடக்கு நல்லியாந்தோட்டம் பகுதியில் வசித்து வந்த சின்னப்பொண்ணு (வயது 80) என்பது தெரியவந்தது. இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டது.

காப்பகத்தில் தங்கினார்:

அப்போது, அங்கு சுற்றிவந்த முதியவர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அவர் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (வயது 65) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை செய்ததில், இவர் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்து மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

பாலியல் தொல்லை:

ராமசாமி மீன் வாங்க வரும்போதெல்லாம் மூதாட்டியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், மூதாட்டி ஒத்துழைக்காத காரணத்தால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். பின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்து ராமசாமி தப்பிச் சென்றுள்ளார். விசாரணைக்குப்பின் ராமசாமியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark