Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நண்பனின் வீட்டில் தங்கிய 8 வயது சிறுவனுக்கு அரங்கேறிய கொடூரம்! அடுக்கு படுக்கையில் நண்பன்... கீழே நடந்த அதிர்ச்சி! திடுக்கிடும் பின்னணி!!!

நண்பனின் வீட்டில் தங்கிய 8 வயது சிறுவனுக்கு அரங்கேறிய கொடூரம்! அடுக்கு படுக்கையில் நண்பன்... கீழே நடந்த அதிர்ச்சி! திடுக்கிடும் பின்னணி!!!

Tamil Spark 5 days ago

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் 2023-ஆம் ஆண்டு 8 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்த மேற்கு கேப் உயர் நீதிமன்றம், கூடுதல் சிறைத் தண்டனைகளையும் வழங்கியுள்ளது.

நண்பரின் வீட்டில் அரங்கேறிய கொடூரம்

2023 ஜூன் 15-ஆம் தேதி, தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த 8 வயது சிறுவன் மீது, அந்த நண்பனின் தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் நடைபெற்றபோது, சிறுவனின் நண்பர் அதே அறையில் இருந்த அடுக்கு படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தது வழக்கின் அதிர்ச்சிகரமான அம்சமாகக் குறிப்பிடப்பட்டது.

மயக்க மருந்து கொடுத்து பல வருஷம் மகளுடன் தகாத உறவில் இருந்த தந்தை! சீரழித்து 7 குழந்தைகள்... அடுத்து 11 வயது மகனை தாயுடன்! மகன் கூறிய பகீர் வாக்குமூலம்!!!

விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த தகவல்கள்

வழக்கு விசாரணையின்போது, குற்றவாளி ஏற்கனவே பல பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர் என்பதும், நீண்ட காலமாக சுதந்திரமாக நடமாடி வந்ததும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் கடுமையான தண்டனையை விதித்தது.

நீதிமன்றம் விதித்த கூடுதல் கட்டுப்பாடுகள்

சிறுவனைக் கொலை செய்த குற்றத்திற்காக மேற்கு கேப் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது. இந்த தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளியின் பெயர் தேசிய பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டதுடன், குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவர் பரோல் கோரினால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

என் மகள் பெரியவள் ஆனதும் என்ன விட்டுட்டு அவ கூட போயிருவியா?.... 13 வயது மகளை கதற கதற தாயின் காதலன் செய்த கொடூரம்... வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark