Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேபாளத்தை உலுக்கிய பனிப்பாறை முறிவு! பயங்கர எச்சரிக்கையில் சிக்கிம்... ஆபத்தான 16 ஏரிகளில் நவீன சென்சார்கள்!!! இமயமலைப் பேரழிவின் பின்னணி..!!!

நேபாளத்தை உலுக்கிய பனிப்பாறை முறிவு! பயங்கர எச்சரிக்கையில் சிக்கிம்... ஆபத்தான 16 ஏரிகளில் நவீன சென்சார்கள்!!! இமயமலைப் பேரழிவின் பின்னணி..!!!

Tamil Spark 4 days ago

மயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை முறிவால் நேபாளத்தின் வடக்குப் பகுதியில் ஆறுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் நான்கு ஊர்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2,000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்டை மாநிலமான சிக்கிம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் பெரும் சேதம்

பனிப்பாறை முறிவை தொடர்ந்து ஆறுகளில் திடீரென பெருக்கெடுத்த வெள்ளநீர், குடியிருப்புகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை அடித்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்துக்கு நடுவே குடும்பத்தைக் காப்பாற்ற ஓடிய வாலிபர்! திக் திக் காட்சி..!!!

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவு இமயமலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பனிப்பாறை ஏரிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற திடீர் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே கண்டறிவதற்கான நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளன.

சிக்கிமில் 16 ஏரிகளில் நவீன சென்சார்கள்

இதன் எதிரொலியாக சிக்கிம் மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மாநிலத்தில் சிறியதும் பெரியதுமாக 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. அவற்றில் அதிக ஆபத்து கொண்டவை என அடையாளம் காணப்பட்ட 16 ஏரிகளில் நவீன சென்சார்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சென்சார்கள் மூலம் பனிப்பாறை ஏரிகளின் நீர்மட்டம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும். ஆபத்தான சூழல் உருவாகும் பட்சத்தில், அதனை விரைவாக கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பதற்கும் இந்த அமைப்பு உதவும்.

இமயமலைப் பகுதிகளிலும் கண்காணிப்பு

சிக்கிம் மட்டுமின்றி சீனா, திபெத் மற்றும் நேபாள எல்லைகளை ஒட்டியுள்ள இமயமலைப் பகுதிகளில் உள்ள அபாயகரமான பனிப்பாறைகளிலும் இதுபோன்ற சென்சார்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. Early Warning System மூலம் பனிப்பாறை ஏரி வெடிப்பு போன்ற ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஆபத்து அதிகரிக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான அவகாசம் கிடைக்கும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை குறைக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ச்சி... மீண்டும் நிலச்சரிவால் தடுப்புகள் உடைந்து சீறிப்பாய்ந்த வெள்ளநீர்! அலைக்கழியும் 1500 உயிர்கள்... திபெத் எல்லை பகுதியில் அடுத்த பேரதிர்ச்சி! சற்றுமுன் அவசர வெள்ள அபாய எச்சரிக்கை....!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark