Dailyhunt
#சற்றுமுன் : விஜய் - காங்கிரஸ் கூட்டணி..... தவெகவுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு அறிவித்த காங்கிரஸ்...!!!

#சற்றுமுன் : விஜய் - காங்கிரஸ் கூட்டணி..... தவெகவுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு அறிவித்த காங்கிரஸ்...!!!

Tamil Spark 5 days ago

மிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ஆட்சியமைக்கும் முயற்சியில் இருக்கும் தவெக-க்கு காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைக்குள் வந்த இந்த முடிவு, மாநில அரசியலில் புதிய கணக்குகளை உருவாக்கியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் இன்று அரசியல் பரபரப்பின் மையமாக மாறியுள்ளது.

பனையூரில் அவசர ஆலோசனை

தகவலின்படி, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களும் முக்கிய நிர்வாகிகளும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தைலாபுரத்தில் பேசிய ரகசிய டீல்.... சசிகலா - ராமதாஸ் உருவெடுக்கும் புதிய அலை! தமிழக அரசியலில் உருவாகும் மெகா கூட்டணி.... அதிரும் அரசியல் களம்!!!

இந்த சந்திப்பில் அடுத்தகட்ட அரசு அமைப்பு, கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய கூட்டணி சிக்னல்

தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக-க்கு பெரும்பான்மை எண்ணிக்கை எட்டாத நிலையில், காங்கிரஸ் ஆதரவு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற சிறிய கட்சிகளின் நிலைப்பாடுகளும் தற்போது கவனிக்கப்படுகின்றன.

இதையடுத்து காங்கிரஸ் எடுத்துள்ள இந்த முடிவு, தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் - காங்கிரஸ் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

BREAKING: அடுத்தடுத்து அடிக்கும் விஜய்! திமுக கூட்டணி உடைந்தது...... ஸ்டாலினின் அறிக்கைக்கும் பிறகும் நடந்த அதிரடி மாற்றம்! அரசியலில் புதிய பரபரப்பு!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark