Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி RIP ஸ்டேட்டஸ் வைத்த கணவன்... அதை பார்த்ததும் வீட்டிற்குள் ஓடிச்சென்று மனைவி செய்த அந்த காரியம்..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!

தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி RIP ஸ்டேட்டஸ் வைத்த கணவன்... அதை பார்த்ததும் வீட்டிற்குள் ஓடிச்சென்று மனைவி செய்த அந்த காரியம்..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!

Tamil Spark 1 week ago

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குடும்பத் தகராறைத் தொடர்ந்து நிகழ்ந்த சோகச் சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கணவர் பதிவிட்ட WhatsApp Status-ஐ தவறாக புரிந்துகொண்ட மனைவி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில், கணவர் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்பத் தகராறுக்குப் பிறகு நடந்த அதிர்ச்சி

திருத்துறைப்பூண்டி அருகே கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (31), நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (24). தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறால் மனமுடைந்த பிரவீன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

# அதிர்ச்சி : பருத்தி எடுத்த 3 பெண்கள் நொடியில் மின்னல் தாக்கி துடிதுடித்து பலி! ஒருவர் படுகாயம்..... மதுரையில் நடந்த பகீர்..!!!

இதையடுத்து, அவர் எலிமருந்து அருந்தியதுடன், 'ஹெலோ' செயலி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தனக்கே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கி 'RIP' என பதிவிட்டுள்ளார்.

தவறான புரிதலால் உயிரிழந்த மனைவி

கணவரின் பதிவைப் பார்த்த காயத்ரி, அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த வேதனையை தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

மறுபுறம், எலிமருந்து அருந்தி மயங்கிக் கிடந்த பிரவீன் என்பவரை பொதுமக்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்கள்! நள்ளிரவில் மாமனாருக்கு வயகரா மாத்திரை கொடுத்து மருமகள்கள் செய்த காரியம்..... கடைசியில் நடந்த பயங்கரம்!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark