Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தப்பு மேல தப்பு செய்றீயேமா... கையில் குழந்தையுடன் ஆமை மீது ஏறி நின்ற பெண்! அதுவும் ஒரு உயிர் தானே... எவ்வளவு கஷ்டப்படுது! இணையத்தில் கொந்தளிப்பை உண்டாக்கிய வீடியோ..!!!

தப்பு மேல தப்பு செய்றீயேமா... கையில் குழந்தையுடன் ஆமை மீது ஏறி நின்ற பெண்! அதுவும் ஒரு உயிர் தானே... எவ்வளவு கஷ்டப்படுது! இணையத்தில் கொந்தளிப்பை உண்டாக்கிய வீடியோ..!!!

Tamil Spark 1 week ago

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சாங்லு சுற்றுலாப் பூங்காவில் பெண் ஒருவர் குழந்தையை கையில் ஏந்தியபடி ஆப்பிரிக்க வகை ஆமையின் மீது ஏறி நின்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆமைகள் மீது ஏறக்கூடாது என எச்சரிக்கை பலகை இருந்தும் இந்த செயல் நடந்துள்ளது. வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், விலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை பலகை இருந்தும் நடந்த அத்துமீறல்

பூங்காவில் ஆமைகள் மீது பார்வையாளர்கள் ஏறக்கூடாது என தெளிவாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் குழந்தையை கையில் வைத்தபடி ஆமையின் மீது ஏறி நின்றார். அப்போது அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் அவரைத் தடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மனுஷங்களா நீங்களாம்.? வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் காதிலிருந்து கழட்டிய தோடு, தங்க நகைகள்! கொடூர வீடியோ...!!!

ஆமையின் உடல்நிலை குறித்து விலங்கு ஆர்வலர்கள் கவலை

இதுமட்டுமின்றி, அந்தப் பெண் மற்றொரு சிறுவனையும் ஆமையின் மீது ஏறுமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. மனிதர்களின் எடையைத் தாங்குவதால் ஆமையின் முதுகெலும்பு மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விலங்கு ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற செயல்களை பார்வையாளர்கள் மேற்கொள்ளாமல் இருக்க பூங்கா நிர்வாகம் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மருத்துவப் பரிசோதனையில் ஆமை ஆரோக்கியம்

வீடியோ பரவியதைத் தொடர்ந்து பூங்கா நிர்வாகம் உடனடியாக அந்த ஆமையை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. பரிசோதனையில் ஆமை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பார்வையாளர்களை ஊழியர்கள் முறையாகக் கண்காணிக்காதது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark