Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக கட்சியிலிருந்து விலகும் முக்கியப்புள்ளி....? இனி விஜய் போட்ட ஒட்டு மொத்த பிளானும் என்னா ஆக போது.....அதிர்ச்சியில் விஜய்!

தவெக கட்சியிலிருந்து விலகும் முக்கியப்புள்ளி....? இனி விஜய் போட்ட ஒட்டு மொத்த பிளானும் என்னா ஆக போது.....அதிர்ச்சியில் விஜய்!

Tamil Spark 4 months ago

மிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய முகமாகக் கருதப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி கட்சியிலிருந்து விலகத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் உள் அரசியல் மாற்றங்களே இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

உள் அரசியல் மாற்றங்கள்

தமிழக வெற்றிக் கழகம் உருவானதிலிருந்து வியூகவகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னணியில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் அண்மையில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவின் வருகைக்குப் பிறகு, தன்னை ஓரங்கட்டப்படுவதாக அவர் உணர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமையுடன் இடைவெளி

இதன் விளைவாக, விஜய்யுடன் நேரடி தொடர்புகளை குறைத்துள்ள அவர், கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது கட்சித் தலைமையின் செயல்பாடுகள் மீது அவருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

போடு வெடிய... தவெக தலைவர் விஜய் கட்சியின் சின்னம் இதுதான்...! லீக்கானது ரகசிய சின்னம்!

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

கட்சிக்குள் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகளில் புறக்கணிப்பு காரணமாக, விரைவில் அவர் தனது விலகல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுக்க முயலும் கட்சிக்கு இது பெரும் சவாலாக மாறக்கூடும் என்பதால், ஜான் ஆரோக்கியசாமியின் அடுத்த கட்ட முடிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதிர்ச்சியில் சீமான்! பிரபல கட்சியில் இணையும் காளியம்மாள்....? இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark