Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா.? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா?

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா.? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா?

Tamil Spark 3 days ago

ந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட அதிகமான கூட்ட நெரிசல் ஏற்படும். குறிப்பாக முன்பதிவு செய்யக்கூடிய ரயில்களின் டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கிடைக்காமல் போகும் சூழலும் உள்ளது.

தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

பொதுமக்களுக்கு குட் நியூஸ்… இன்று முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை!

ரயில்வேயின் தற்போதைய நடைமுறைப்படி, பயணிகள் தங்களது பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதன்படி தீபாவளி காலப் பயணங்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்க உள்ளது.

பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ ரயில்வே செயலி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

தீபாவளி காலத்தில் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் முன்பதிவு தொடங்கும் (செப்டம்பர்-6) அன்று காலை 8 மணிக்கு முன்பாகவே தயாராக இருந்து, தங்களது பயணத் தேதி மற்றும் ரயிலைத் தேர்வு செய்து விரைவாக டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணம் சம்பாதிக்க ஆசையா உஷார்? உங்க வங்கிக்கணக்கை வாடகைக்கு விடுறீங்களா? தமிழ்நாடு முழுவதும் 837 பேர் கைது.!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark