Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!

திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!

Tamil Spark 1 month ago

மிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று விஜய் தலைமையிலான தவெக கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது.

Tamil Nadu Election 2026: தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மே மாதம் 04-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக இடையே கடும் போட்டி நடைபெறும் நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி தற்போது தனித்து களம் காண்கிறது.

சூடுபிடிக்கும் தமிழக அரசியல்:

இதனிடையே தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் வாயிலாக தீவிர களப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் தற்போதைய சூழ்நிலையில் நான்குமுனை போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது.

தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் பிரபல கட்சி....? பரபரப்பில் அரசியல் களம்!

தேர்தல் அறிக்கை:

ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென தனித்த தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், இன்று மாலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இந்த அறிக்கை மக்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவலுடன் மக்கள்:

மேலும் விஜயின் வருகை காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் பிரியும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், தேர்தல் நாள் மற்றும் தேர்தல் முடிவுக்கான நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark