Dailyhunt
210 தொகுதிகளில் நாங்க தான்... அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்..! இபிஎஸ் உறுதி..!!

210 தொகுதிகளில் நாங்க தான்... அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்..! இபிஎஸ் உறுதி..!!

Tamilwire 6 days ago

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 அன்று தொடங்கியது.

இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி கடைசி நாளாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்து உள்ளார். அதிமுக தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து செயல்படும் முடிவை எடுத்துள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 169 தொகுதிகளில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது. வேட்பாளர்களின் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டது. அதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எட்டாவது முறையாக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஐந்து முறை இதுவரை இந்த தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று இருக்கிறார். இந்த முறை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தலைமையிலான என் டி ஏ கூட்டணி வெற்றி பெறும் என்ற உறுதிப்படுத்த தெரிவித்தார். தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறினார். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனுதாக்கல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேமுதிக கட்சிக்கு 2026 ஆம் ஆண்டு எம்.பி சீட் வழங்குவதாக தெளிவாக கூறியதாகவும் அவர்களின் மனநிலை வேறாக இருந்தது என்றும் கூறியுள்ளார். சீட் கொடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றிவிட்டார் என பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டை நிலையில் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 அன்று தொடங்கியது. இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி கடைசி நாளாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்து உள்ளார். அதிமுக தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து செயல்படும் முடிவை எடுத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire