Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அடப்பாவமே...!! - -சி.விஜயபாஸ்கர் பங்கேற்க கூட்டத்தில் இப்படியா?... தவெக தொண்டர்களால் நேர்ந்த அவமானம்...!

அடப்பாவமே...!! - -சி.விஜயபாஸ்கர் பங்கேற்க கூட்டத்தில் இப்படியா?... தவெக தொண்டர்களால் நேர்ந்த அவமானம்...!

Tamilwire 1 week ago

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பேச தொடங்கும் முன்பே கூட்டம் கலைந்து காலி நாற்காலிகளாக காட்சியளித்ததால் விரக்தி அடைந்த சி.

விஜயபாஸ்கர், கட்சி நிர்வாகிகள் தடுத்தும் கூட்டம் சாரை சாரையாக வெளியேறியதால் புலம்பிய தவெக தொண்டர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளருமான சி. விஜயபாஸ்கர் தலைமையில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விராலிமலை செக்போஸ்ட் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த திரைப்படப் பாடலுக்கு கலைஞர்கள் உற்சாக நடனமாடினர். மேலும் அந்தப் பாடலுக்கு ஏற்றார் போல் மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தவெக துண்டுகளை சுற்றிக்கொண்டு குத்தாட்டம் போட்டனர்.

பின்னர் எம்ஜிஆர் வேடம் அணிந்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் போல் கோட் அணிந்தும் அவரது வேடமிட்டு வருகை தந்த கலைஞர் ஒருவர் விஜய் போலவே சைகைகளை செய்து நடனமாடி கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் முதலமைச்சர் போல் வேடம் அணிந்து இருந்த கலைஞரை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். பின்னர் விஜயபாஸ்கருக்கு மாலை அணிவிக்க நிர்வாகிகள் வந்தபோது முதலமைச்சர் போல் வேடம் அணிந்து அந்த கலைஞரை கொஞ்சம் நகர்ந்து நிற்க வைத்துவிட்டு மாலையை வாங்கினார்.

பின்னர் முதலமைச்சர் போல் வேடம் அணிந்த கலைஞர் அவரைப் போலவே பொதுமக்களை செல்பி வீடியோ எடுத்தும் செய்கைகளை கைகளை ஆட்டி செய்த நிலையில் அவரோடு பலரும் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பேசுவதற்கு முன்பே சாரை சாரையாக கூட்டம் நடைபெறும் பகுதியை விட்டு மக்கள் வெளியேறினர். கூட்டம் தொடங்கும் போது சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் விஜயபாஸ்கர் பேசும் முன்பே மக்கள் கூட்டம் முழுமையாக வெளியேறியதால் காலி நாற்காலிக்கு மத்தியில் சி. விஜயபாஸ்கர் உரையாற்றினார். கூட்டத்தை களைய விடாமல் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எவ்வளவோ கட்டுப்படுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பேச தொடங்கும் முன்பே கூட்டம் கலைந்து காலி நாற்காலிகளாக காட்சியளித்ததால் விரக்தி அடைந்த சி. விஜயபாஸ்கர், கட்சி நிர்வாகிகள் தடுத்தும் கூட்டம் சாரை சாரையாக வெளியேறியதால் புலம்பிய தவெக தொண்டர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire