Dailyhunt
அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

Tamilwire 1 week ago

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இவர், ஏற்கெனவே ஏழாவது முறையாக இந்தத் தொகுதியில் களம் காண்கிறார்.

2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அந்தக் காலகட்டத்தில் கால்நடை வளத்துறை அமைச்சராகவும், பின்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அவர், 2009 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு திமுகவில் இணைந்தார். அந்த மாற்றம் அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.திமுகவில் இணைந்த உடனேயே 2009 இடைத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு பெரிய வெற்றியைப் பெற்றார்.

அதன் பிறகு 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் திமுக சார்பில் வெற்றி பெற்று தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது தமிழக அமைச்சரவையில் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இது அவருக்கு ஏழாவது முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தான் போட்டியிடும் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க அனிதா ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை மக்கள் விரட்டி அடித்ததாக தெரிகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறிய கல்விளை மக்கள் வாக்கு சேகரிக்க எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி அவரை திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டது.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இவர், ஏற்கெனவே ஏழாவது முறையாக இந்தத் தொகுதியில் களம் காண்கிறார். 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அந்தக் காலகட்டத்தில் கால்நடை வளத்துறை அமைச்சராகவும், பின்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire