Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

Tamilwire 1 week ago

ந்தியாவின் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக 5 S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

இந்தியா வெளியிட்ட டெண்டருக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யா தனது விரிவான திட்ட அறிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்கனவே S-400 முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சமீபத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்த அமைப்புகள் இந்திய வான் எல்லையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதல் S-400 அமைப்புகளை பெறுவதற்கான திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய டெண்டருக்கான ரஷ்யாவின் பதில் தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் 5 S-400 அமைப்புகளை வாங்க முடிவு செய்திருந்தது. அவற்றில் 4 அமைப்புகள் ஏற்கனவே இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5-வது அமைப்பு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

S-400 அமைப்பு பல்வேறு வகையான வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது. சுமார் 40 கி.மீ. முதல் 400 கி.மீ. வரையிலான தொலைவில் வரும் எதிரி விமானங்கள், ட்ரோன்கள், பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட இலக்குகளை கண்டறிந்து எதிர்கொள்ளும் திறன் இதற்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக வாங்கப்பட உள்ள 5 S-400 அமைப்புகள் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தான பிறகு, புதிய அமைப்புகளின் விநியோகம் அடுத்த 3 ஆண்டுகளில் தொடங்கும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ரஷ்யாவின் S-400 மீது மட்டுமே சார்ந்திருக்காமல், இந்தியாவும் தனது சொந்த நீண்டதூர வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 'ப்ராஜெக்ட் குஷா' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த அமைப்பு எதிர்காலத்தில் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக 5 S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்தியா வெளியிட்ட டெண்டருக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யா தனது விரிவான திட்ட அறிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire