Dailyhunt
பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

Tamilwire 1 week ago

மிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது தமிழக வெற்றிக் கழகம்.

விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய், முதலமைச்சர் ஆக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அனைத்து எம்எல்ஏக்களின் ஏகோபித்த ஆதாரத்துடன் விஜய் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழக ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரிமைக் கோருகிறார்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது தமிழக வெற்றிக் கழகம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire